வாஷிங்டன்:வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது.
டிரம்ப் அதிபர் பொறுப்பு ஏற்றதும் கடந்த ஆண்டு இப்தார் நிகழ்ச்சியை ரத்து செய்தார். இதனால் முஸ்லிம் மக்கள் வருத்தமுற்றனர்.இந்நிலையில் இஸ்லாம்பயத்தால் அமெரிக்காவில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்தன. 2017ம் ஆண்டில்மட்டும் 2600தாக்குதல்கள் நடந்தன.
இந்நிலையில், இந்த ஆண்டு இப்தார் விருந்து வெள்ளை மாளிகையில் நடந்தது.
அதில், மத்திய கிழக்கு உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள், பிரமுகர்கள் பங்கேற்றனர்.அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர், தனதுவெளிநாட்டு பயணத்தின்போது முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகள் 2நாள் மாநாட்டில் பங்கேற்றேன். அதை என் வாழ்வில் மறக்கமுடியாது.
மத்திய கிழக்கு நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா செய்துமுடிக்கவேண்டிய பல விஷயங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்துக்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாளிகை வாசலில் அவர்கள் மவுன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசு விருந்தையும், போலித்தனத்தையும் ஒன்றாக படைக்கிறது என்று கண்டனம் தெரிவித்தனர்.
முஸ்லிம் மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் அதிபர் டிரம்ப் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக