ஆந்திராவில், பி.எஸ்சி படித்த மாணவருக்கு, பி.காம் பட்டம் வழங்கியுள்ளது ஆந்திரா பல்கலைக்கழகம்.
ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் நந்திகம் பகுதியைச் சேர்ந்தவர் அட்டாட ஸ்ரீஹரி. இவர், ஆந்திரா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தெக்காலியில் உள்ள பி.எஸ்.ஜே.ஆர் கல்லூரியில் பி.எஸ்சி படித்துள்ளார். எந்தவொரு அரியரும் இல்லாமல் தனது படிப்பை 2015-2016ஆம் ஆண்டு முடித்துள்ளார். இதற்கான, பட்டமளிப்பு விழாவில், பி.எஸ்சி படிப்புக்கு பதிலாக பி.காம் படிப்புக்குப் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ் மாணவருக்குத் தபால் மூலம் வந்துள்ளது. அப்போது, அவர் சான்றிதழை சரிபார்க்கவில்லை.
இதையடுத்து, அட்டாட ஸ்ரீஹரி, 2017ஆம் ஆண்டு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். அப்போது, நேர்காணலுக்குச் சென்றபோதுதான், சான்றிதழ் தவறாக உள்ளது தெரியவந்தது. உடனடியாக, ஆந்திரா பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்டு தெரிவித்தபோது, 15 நாட்களுக்குள் சரி செய்து தரப்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஊடகத்திடம் முறையிட்டுள்ளார் மாணவர்.
இதுகுறித்து ஆந்திரா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் உமாமஹேஸ்வர ராவ் கூறுகையில், அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எப்படியும், விரைவில் சான்றிதழ் சரி செய்து தரப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து மனிதவள அமைச்சர் கன்ட ஸ்ரீனிவாச ராவும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக