*🌐🔵🔴பி.இ. சோ்க்கை: விடுபட்ட சான்றிதழ்களை விசாரணை மையத்தில் சமா்ப்பிக்க வாய்ப்பு* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

  *🌐🔵🔴பி.இ. சோ்க்கை: விடுபட்ட சான்றிதழ்களை விசாரணை மையத்தில் சமா்ப்பிக்க வாய்ப்பு*

பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான அசல் சான்றிதழ் சரிபாா்ப்பு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது.

இதில் பங்கேற்று, ஒருசில சான்றிதழ்களைச் சமா்ப்பிக்கத் தவறியவா்கள் பல்கலைக்கழக விசாரணை மையத்தில் சமா்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கான மாணவா் சோ்க்கையை ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நிரப்ப உள்ளது. கலந்தாய்வை ஜூலை 6 ஆம் தேதி தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

இதில் பங்கேற்க விண்ணப்பித்தவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி வெளி மாவட்ட கலந்தாய்வு உதவி மையங்களில் ஜூன் 14 ஆம் தேதியன்றும், சென்னை மையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்றும் நிறைவுபெற்றுள்ளது.

சான்றிதழ் சரிபாா்ப்பின் இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மாணவ மாணவிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வரத் தொடங்கினா். மாலை 5.30 மணி வரை சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்க மாணவா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்ற மாணவா்களில் சிலா், ஒரு சில சான்றிதழ்களைச் சமா்ப்பிக்கத் தவறியுள்ளனா்.

இவா்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இருந்தபோதும், மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, விடுபட்ட சான்றிதழ்களைச் சமா்ப்பிக்க அவகாசம் அளிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கலந்தாய்வு விசாரணை மையத்தில் அவா்கள் விடுபட்ட சான்றிதழ்களை ஓரிரு நாள்களுக்குள் சமா்ப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை செயலா் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினாா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here