உயிரோடு இருக்கிறாரா ஈழ உளவு புலி பொட்டு அம்மான்; புலிகள் பற்றிய செய்திகள் உலாவருகின்றன. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உயிரோடு இருக்கிறாரா ஈழ உளவு புலி பொட்டு அம்மான்; புலிகள் பற்றிய செய்திகள் உலாவருகின்றன.


சென்னை: விடுதலை புலிகளின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்து வந்த யுத்தம் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த இறுதி யுத்தத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை புலிகளை வழிநடத்தி வந்த அந்த இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. அதுமட்டுமின்றி விடுதலை புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக அழித்துவிட்டோம் எனவும், அந்த இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.

ஆனால், பிரபாகரன் உடல் என்று காண்பிக்கப்பட்ட உடல் அவருடையது அல்ல பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், தேவைப்படும்போது வெளியில் வருவார் எனவும், விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அந்த இயக்கத்தின் உளவு பிரிவு தலைவருமான பொட்டு அம்மான் என்ற சண்முகலிங்கம் சிவசங்கர் உயிரோடு இருக்கிறார் எனவும் விடுதலை புலி ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனை இலங்கை அரசு மறுத்து வந்தாலும், பிரபாகரன் உடல் என்று ஒரு உடலை காண்பித்த இலங்கை அரசால் ஏன் பொட்டு அம்மானின் உடலை காண்பிக்க முடியவில்லை என விடுதலை புலி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதற்கிடையே பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் உயிரோடு இருக்கிறார் என கூறியிருந்தார். அதனையடுத்து , ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனும், பொட்டு அம்மானும்தான் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். மேலும் பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு கூறுவது போல் பொட்டு அம்மான் இறந்துவிட்டதாக இலங்கை அரசால் எந்த ஆதாரத்தையும் உறுதியாக வெளிக்காட்ட முடியவில்லை. 

அதுமட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட பொட்டு அம்மான் தலைமையில் மீண்டும் விடுதலை புலிகளின் உளவுப் பிரிவு இயங்கிவருகிறது  என எச்சரிக்கை விடுத்து, தேடப்படுவோர் பட்டியலில் பொட்டு அம்மானின் பெயரையும் சேர்த்தது இண்டர்போல். எனவே இவைகளை எல்லாம் வைத்து பார்க்கும்போது சுப்பிரமணியன் சுவாமி கூறுவது நிச்சயம் பொட்டு அம்மானாகத்தான் இருக்க முடியும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Rashtrapati has flatly rejected the stupid Illegal resolution of the TN Legislative Assembly to set Rajiv Gandhi the killer conspirators free. Actually the killers are lucky that they have not been hanged as per SC .The Head conspirator is living in Italy but seriously ailing

— Subramanian Swamy (@Swamy39) June 15, 2018

இந்நிலையில், சுப்பிரமணிய சுவாமியின் இந்த ட்வீட்டை அடுத்து விடுதலை புலிகளின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான் இத்தாலியில் உயிரோடு இருப்பதாக மேலும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிரபாகரன் கொல்லப்படவில்லை என உறுதியாக நம்பி இருக்கும் விடுதலை புலிகள் ஆதரவாளர்களிடையே, விடுதலை புலிகளின் மூளையாக இருந்து புலிகளின் பல போர் வெற்றிகளுக்கு அடித்தளமிட்ட பொட்டு அம்மானும் உயிரோடு இருக்கிறார்  என தகவல்கள் வெளியாக தொடங்கியிருக்கிறது.

சர்வதேச காவல்துறை கூறுவது உண்மை எனில், சுப்ரமணியன் சுவாமியின் ட்வீட் பொட்டு அம்மானை பற்றியது எனில், ஈழ விடுதலை போரானது முள்ளிவாய்க்காலோடு முடிந்து விடவில்லை என்பதும், புலிகளின் அடுத்த பாய்ச்சல் நிச்சயம் வீரியம் மிக்கதாக இருக்கும் என பல ஈழ ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here