ரயில்களில் உணவுகள் தயாராகும் விதத்தை நேரடியாக ஐஆர்சிடிசி இணைய தளத்தில் ஒளிபரப்ப நடவடிக்கை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ரயில்களில் உணவுகள் தயாராகும் விதத்தை நேரடியாக ஐஆர்சிடிசி இணைய தளத்தில் ஒளிபரப்ப நடவடிக்கை

ரயில்களில் உணவுகள் தயாராகும் விதத்தை நேரடியாக ஐஆர்சிடிசி இணைய தளத்தில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ரயில் பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகள், ரயில்களில் காணப்படும் குறைகள் உள்ளிட்டவற்றை விரைவாகத் தீர்ப்பதற்காக "ரயில் மதத்" எனப்படும் செல்பேசி செயலியை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து, ரயில் பயணிகளுக்கு மேலும் புது திட்டங்களை அமல்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

ரயில்களிலும் ரயில்நிலையங்களிலும் உணவு சமைக்கும் முறை சுகாதாரமானதாக இல்லை எனப் பல்வேறு புகார்கள் வந்தன. சமீபத்தில் ரயிலின் கழிவறையில் தேநீர் தயாரிக்கும் காட்சியும் இணையத்தில் வெளியாகி வைரலாகப் பரவியது.

இந்நிலையில், ரயில்களிலும் ரயில்நிலையங்களிலும் வழங்கப்படும் உணவுகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது பற்றி நேரடியாகக் காணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆர்சிடிசி) இணைய தளத்தின் மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பயணிகளுக்குத் தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய ரயில்வே அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், விரைவில் இது அமலுக்குவரும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here