தமிழகத்தில் உள்ள ஆங்கில பெயர்களை தமிழ்ப் பெயர்களாக மாற்றத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்களின் ஆங்கிலப் பெயர்களை தமிழில் மாற்ற முடிவு செய்துள்ளதாக நேற்று(ஜூன் 13) சட்டமன்றத்தில் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்தார்.
பெயர் மாற்றம் குறித்து அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறுகையில் நகரங்களின் ஆங்கில பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய தமிழ் வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறையை சார்ந்த மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு மூன்று மாதத்திற்குள் தங்களின் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும் கூறினார். பின்னர் அந்த அறிக்கை முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டு, அதன் படி பெயர் மாற்ற வேலைகள் நடைபெறும் என்று கூறினார்.
உதாரணத்திற்கு (Egmore) என்ற பெயர் எழும்பூர் என்றும். (Tuticorin) என்ற பெயர் தூத்துக்குடி என்று மாற்றப்படும். இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்கள் தமிழில் மாற்றப்படும். மேலும் இத்திட்டத்திற்காக தமிழக அரசு சார்பில் ரூபாய் 5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக