*✳நடப்பு (2018-19) கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக்., நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கான மாநில அளவிலான கலந்தாய்வு காரைக்குடியில் சனிக்கிழமை தொடங்கியது*
*✳பட்டயப் படிப்பு மற்றும் பி.எஸ்.சி. (கணிதம்) படித்த மாணவர்கள் நேரடியாக பி.இ. மற்றும் பி.டெக் 2 ஆம் ஆண்டு சேர்வதற்கான கலந்தாய்வு காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது*
*✳இங்கு நடப்பாண்டிற்கான முதல் நாள் கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது*
*✳இதில் பங்கேற்ற முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் லெதர், பிரிண்டிங் டெக்னாலஜி, கெமிக்கல், டெக்ஸ்டைல் ஆகிய பிரிவுகளைத் தேர்வு செய்தனர்*
*✳கல்லூரிகளைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு சேர்க்கைக்கான அனுமதிக் கடிதத்தை கலந்தாய்வுச் செயலர் ஏ. இளங்கோ வழங்கினார்*
*✳ஜூலை 1 மற்றும் ஜூலை 2-ஆம் தேதி மதியம் வரை சிவில் பாடப் பிரிவினருக்கும், ஜூலை 2 மதியம் முதல் 5 வரை மெக்கானிக்கல் பாடப் பிரிவினருக்கும், ஜூலை 6 முதல் 8 ஆம் தேதி மாலை 4.30 மணிவரை எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பாடப் பிரிவினருக்கும், ஜூலை 8 ஆம் தேதி மாலை பி.எஸ்சி. (கணிதம்) பட்டம் பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது*
*✳இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கணேசன் மற்றும் பேராசிரியர்கள் செய்துள்ளனர்*
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக