விருத்தாசலம் பெரியார் நகர் ராஜவேல் வீதியில் வசிப்பவர் செல்வக்குமார்
. இவர் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவருக்கு மூன்று குழந்தைகள்.
இவர்களின்
இரண்டாவது மகன் பிரேம்குமார். இவர் தற்பொழுது நடந்த நீட் தேர்வில் 97 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பிரேம்குமார் 8-ம் வகுப்பு வரை விருத்தாசலம் நகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், 10-ம் வகுப்பிலிருந்து புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியிலும் தமிழ் மீடியத்தில் படித்துள்ளார்.
பிரேம்குமார் பத்தாம் வகுப்பு தேர்வில் 467 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 975 மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.
நீட் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து பிரேம்குமார் கூறியதாவது, 'எங்க அப்பா டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். எனக்கு ஒரு அண்ணனும், ஒரு தங்கையும் உள்ளனர்.
அண்ணன் பிரதாப்குமார் தனியார் கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்து வருகிறார். தங்கை செல்வராணி நான் படிக்கும் பள்ளியிலேயே பத்தாம் வகுப்பு படித்து வெற்றி பெற்றுள்ளார்.
எனது தந்தை டீக்கடை மூலம் கிடைக்கும் வருமானத்தில் எங்கள் 3 பேரையும் மிகவும் சிரமப்பட்டுதான் படிக்கவைக்கிறார்.
நான் சிறு வயதில் இருந்தே டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற லட்சியதில் இருந்தேன். எனது குடும்பம் இருந்த சூழ்நிலையில், நீட் தேர்வுக்கு என்று எங்கும் செலவு செய்து பயிற்சி வகுப்புக்குச் சென்று படிக்கும் நிலை இல்லை.
இதனால் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் நன்கு திட்டமிட்டு பதினோராம் வகுப்பு பாடம் மற்றும் பொதுவான பாடங்களையும் நன்கு படித்தேன்.
எனக்குத் தேவையான மெட்டீரியல்களை இணையதளத்தில் தேடி எடுத்து படித்து தேர்வுக்கு தயாரானதால் என்னால் வெற்றி பெற முடிந்தது.
கடந்த ஆண்டு அரியலூர் அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா அக்கா நீட் தேர்வால் உயிழந்தார்.
நீட் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த அந்த அக்காவின் கனவை நான் நிறைவேற்றி
உள்ளதாகவே கருதுகிறேன்.
மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் மருத்துவராகி என்னைப் போன்ற ஏழை, எளிய மக்களுக்காகச் சேவை செய்வேன்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக