பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறையில் எம்.ஏ., எம்.பில்., படிப்புகளுடன் வேலைவாய்ப்பு மற்றும் தேவை சார்ந்த பல சான்றிதழ் படிப்புகளை அளித்து வருகிறது.
முதுகலை மற்றும் எம்.பில். பாலினவியல் படிக்க ஏதாவது ஓர் இளங்கலை படிப்பு முடித்த மாணவர்கள் (அறிவியல், சமூக அறிவியல், மொழியியல், சட்டம், பொறியியல்) விண்ணப்பிக்கலாம்.
மேலும் தற்போது படித்து கொண்டுள்ள மாணவர்கள், கூடுதலாக மற்ற படிப்புளையும் படிக்க வசதியாக மகளிரியல் துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு சார்ந்த சான்றிதழ் படிப்புகளான பேஷன் டிசைனிங், மகளிர் தொழில் முனைவு, ஆய்வுத்திறன்கள், வாழ்வியல் திறன்கள் மற்றும் பாலினவியல் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்று பாலினத்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க www.bdu.ac.in என்ற இனையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 10ம் தேதி ஆகும்.
மேலும் விபரங்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஜாமலை வளாகத்தில் உள்ள பாரதிதாசன் மகளிரியல் துறையை அணுகலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக