பூமியின் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம் மற்றும் பரப்பளவை அளவிடும் தொழில்நுட்பத்தை கூகுள் எர்த், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
பூமியின் நிலப்பரப்பு முழுவதையும் எளிதாகக் காணும் வசதியைக் கூகுள் எர்த் நிறுவனம் 2001ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அன்று முதல் இன்றுவரை பயனர்களின் வசதிக்கேற்ப பல்வேறு மாற்றங்களைச் செய்துவரும் இந்நிறுவனம்; கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்த ஆண்டு ஐஓஎஸ் பயனர்களுக்கும் இந்தச் சேவையை அறிமுகம் செய்தது. முன்னதாக கணினி உள்ள மென்பொருளில் பூமியின் இரண்டு புள்ளிகளுக்கு இடையில் உள்ள தூரத்தை அளவிடும் தொழில்நுட்பம் இருந்துவந்தது. அதை மொபைல் செயலியிலும் கொண்டுவர வேண்டும் என்பதே கூகுள் எர்த் பயனர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவந்தது.
பயனர்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்நிறுவனம் தற்போது பூமியின் இரண்டு புள்ளிகளுக்கு இடையில் உள்ள தூரம் மற்றும் அதன் பரப்பளவை அளவிடும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி விரைவில் ஐஓஎஸ் பயனர்களுக்கும் வெளியாகும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், இந்தப் புதிய தொழில்நுட்பம் குறிப்பாக மாணவர்கள், விஞ்ஞானிகள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோருக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. இதுகுறித்து கூகுள் எர்த் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் கோபால் ஷா தனது ப்ளாக்கில், "நீங்கள் கணக்கு ஆசிரியராக இருந்தால் உங்கள் மாணவர்களுக்கு மேப்பில் இரு புள்ளிகளை கொடுத்து அதற்கிடையே உள்ள தூரத்தை கணக்கிடச் சொல்லலாம் (கூகுளைப் பயன்படுத்தாமல்)" என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக