குழந்தை கருவிலேயே கற்றுக்கொள்ளும் அற்புதம்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

குழந்தை கருவிலேயே கற்றுக்கொள்ளும் அற்புதம்!

கர்ப்பகாலத்தின்போது பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான தொடர்பு, குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்ப்பகாலத்தில் ஒரு தாய் ரசிக்கும் பாடல்கள்; கேட்கும் நல்ல விஷயங்கள் அனைத்தும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் சென்றடையும். இது எதிர்காலத்தில் ஒரு குழந்தையின் கற்றல் மற்றும் அபிவிருத்தி திறனை அதிகரிக்கும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

டெவலப்மென்ட் ரிவ்யூ பத்திரிகையில் வெளியான இந்த ஆய்வில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக குழு ஒன்று 1,862 பெற்றோர்களிடமிருந்து 14 விதமான ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வில் கர்ப்பகாலத்தில் குழந்தைகளைப் பற்றியும், பெற்றோர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளைப் பற்றி பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த ஆய்வு குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முன்னணி எழுத்தாளர் சாரா ஃபோலே கூறுகையில், "ஒரு குழந்தை கருவில் இருக்கும்போது பெற்றோருக்கும் அதற்கும் உள்ள தொடர்பு அதன் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனைக் கொண்டு பெற்றோர்களின் குணாதிசயங்களையும் குழந்தைகள் கர்ப்பகால காலத்திலேயே அறிந்துகொள்ள முடியுமா என்பதை ஆராய்ச்சி செய்யவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here