இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கான தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது.
இதில், 1.08 லட்சம் பேருக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை எண் வழங்கப்படும்.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டில் இருந்து, 'ஆன்லைன்' கவுன்சிலிங் அமலுக்கு வருகிறது.
இந்த கவுன்சிலிங், ஜூலை முதல் வாரத்தில் துவங்க உள்ளது.கவுன்சிலிங்கில் பங்கேற்க, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து, 1.08 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.
விண்ணப்பித்த மாணவர்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் இன ரீதியான இட ஒதுக்கீடு அடிப்படையில், தரவரிசை எண் வழங்கப்படுகிறது. இதற்கான தரவரிசை பட்டியல், நாளை காலை, 8:30 மணிக்கு வெளியிடப்படுகிறது
.சென்னை, அண்ணா பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சியில், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், பட்டியலை வெளியிடுகிறார்.
கவுன்சிலிங் எப்போது நடக்கும், ஆன்லைனில் விருப்ப பாடத்தை பதிவு செய்வது எப்போது, என்ற விபரங்களும் நாளை வெளியிடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக