வரலாறு காணாத தண்ணீர் தட்டுப்பாட்டை இந்தியா எதிர்கொள்ள இருப்பதாக நிதி அயோக் அமைப்பு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக நிதி அயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வரும் 2030இல் இந்தியாவின் நீர்த்தேவை ,சப்ளையை விட விஞ்சி விடும். இதுவரை 600 மில்லியன் மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 2,00,000 மக்கள் பாதுகாப்பான குடிநீர் வசதி இன்றி உயிரிழந்து வருகின்றனர். டெல்லி,பெங்களுரூ,சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட 21 நகரங்களி்ல் வரும் 2020இல் நிலத்தடி நீர் வறண்டு விடும். இதனால் 100 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவா்.
இதே நிலை தொடர்ந்தால்,2050இல் நாட்டின் சராசரி உற்பத்தியில் 6 விழுக்காடு இழப்பு ஏற்படும். மேலும், 40 விழுக்காடு நிலத்தடி நீர் முறையற்ற பயன்பாட்டினால் சுரண்டப்பட்டு விட்டது. 70 விழுக்காடு சப்ளையானது மாசுபட்டுள்ளது.
இவ்வாறு அந்த ஆய்வு கூறியுள்ளது.
இந்த ஆய்வின்படி,24 மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்கள் எவ்வாறு நீர் மேலாண்மையைக் கையாள்கின்றன என்ற அடிப்படையில்வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், குஜராத், ஆந்திரா,மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன. ஜார்கண்ட்,பீகார் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் கடைசி இடத்தில் உள்ளன. இவை ஹிமாலய மாநிலங்கள் அல்லாத மாநிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஹிமாச்சலப் பிரதேசம் தற்போது தண்ணீர் தட்டுபாட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தோடு சில மாநிலங்கள் இணைக்கப்பட்டு வடகிழக்கு மற்றும் ஹிமாலய மாநிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.இந்த இரு வகைபாட்டில் உள்ள மாநிலங்கள் வேறுபட்ட நிலவியல் மற்றும் நீரியல் தன்மைகளை கொண்டவை.
60 விழுக்காடு மாநிலங்களில் நீர் மேலாண்மையானது மோசமான நிலையிலுள்ளதால் இப்போதைய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என நிதி அயோக் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக