அரசுக்கு நிதி இழப்பு: அதிகாரிகள் மீது நடவடிக்கை! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசுக்கு நிதி இழப்பு: அதிகாரிகள் மீது நடவடிக்கை!



அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியவர்களிடமிருந்து அந்தத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம் பேரூராட்சி செயல் அதிகாரி மாதையன், பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 33 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்துள்ளார். கையாடல் செய்த தொகையை மாதையனிடமிருந்து வசூலிக்க நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கும், பேரூராட்சிகள் இயக்குநருக்கும் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கும் உத்தரவிட வேண்டும் என சேலம் பனமரத்துபட்டி முன்னாள் துணை தலைவர் பாலச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுப்ரமணியம் அமர்வு முன்பு நேற்று (ஜூன் 27) விசாரணைக்கு வந்தது. அப்போது, "அரசுக்கு ஏற்பட்ட இழப்பை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராகத் துறை ரீதியான மற்றும் குற்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என நீதிபதி சுப்ரமணியம் உத்தரவிட்டார்.

மேலும் வழக்கு நிலுவையில் இருந்தாலும், வசூல் நடவடிக்கைகளைத் தொடர எந்தத் தடையும் இல்லை எனத் தெளிவுபடுத்திய நீதிபதி, அரசு நிதியைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள், இழப்பை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தவறான நடத்தையே எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here