*தமிழ் இணைய செய்திகள்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*🔴⚪🌐பிளஸ் 1 வகுப்பில் நீக்கப்படும் தொழிற்பாடப் பிரிவு: கடலூர் மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை தவிர்ப்பு*
*🎯தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு, பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் புதிய பாடத்திட்டங்களை வகுத்துவருகிறது*
*🎯பள்ளிக் கல்வித் துறையின் இத்தகையை செயல் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*🎯அதற்கேற்ற வகையில் இந்த ஆண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது*
*🎯அடுத்த ஆண்டு 2,7,10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தினையும், அதற்கு அடுத்த ஆண்டு முதல் 3,4,5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டத்தினை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது*
http:/www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*🎯இந்த சூழலில் இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பில் தொழில் பாடப் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையை பள்ளி நிர்வாகங்கள் தவிர்த்து வருகின்றன*
*🎯கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி பாடப் பிரிவுக்கான ஆசிரியர், இந்த ஆண்டுடன் ஓய்வுபெற்ற நிலையில் புதிய ஆசிரியர் நியமிக்கப்படவில்லை*
*🎯மாறாக கடந்த ஆண்டு தொழிற்பாடப் பிரிவில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்த மாணவர்கள், இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பிற்கு தேர்ச்சி பெற்ற நிலையில், அவர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்துவருகிறது*
*🎯மேலும் மற்ற பள்ளிகளில் தொழிற்பாடப் பிரிவுகளில் சேரவரும் மாணவர்களை மூளைச் சலைவை செய்து, வேறு பாடப் பிரிவில் சேர்ந்து பயிலும் படி அறிவுத்தப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்*
*🎯பொதுவாக அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய ஒரு பாடப்பிரிவாகவே தொழிற்கல்வி பாடப்பிரிவு கருத்தப்படுகிறது*
*🎯மேலும் டிப்ளமோ மற்றும் பொறியியல் கல்லூரிக்குச் செல்ல வாய்ப்பில்லாத ஏழைக் குடும்பத்தை மாணவர்களுக்கான வாய்ப்பாகவும் பாடப் பிரிவு அமைந்திருந்தது*
*🎯பிளஸ் 1 வகுப்பில் தொழிற்பாடப் பிரிவு நீக்கப்பட்டது தொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பு வகிக்கும் ஆர்.முருகனிடம் கேட்டபோது, “தொழிற்பாடப் பிரிவு நீக்க முடிவுசெய்துள்ளது*
*🎯அதற்கான ஆசிரியர் தேர்வும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு முதல் தொழிற்பாடப் பிரிவில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது” என்றார்*
*🎯இது தொடர்பாக கல்வியாளர் ஆயிஷா நடராஜன் கூறுகையில், “ஏழை எளிய மாணவர்களுக்கு தொழிற்கல்வி மூலம் வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. அது தற்போது தடைபட்டுள்ளது*
*🎯பட்டப் படிப்பு முடித்திருந்தாலும் திறன் இல்லாத பட்டதாரிகளே கல்லூரிகள் மூலம் வெளிவருகின்றனர் என்ற கருத்துள்ள நிலையில், பட்டப்படிப்பு இல்லாத நிலையில் தொழிற்கல்வி பயின்று திறனுடன் கூடிய மாணவர்களை பள்ளிகள் உருவாக்கி வந்தது*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*🎯ஆனால் ஏழை எளிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அரசு எடுத்திருக்கும் முடிவு ஆபத்தானது என்றார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக