K2-236b' இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புதிய கிரகம் இது!* அகமதாபாத்தில் உள்ள தேசிய வானியல் ஆராய்ச்சி (Physical Research Laboratory) மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு புதிய - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

K2-236b' இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புதிய கிரகம் இது!* அகமதாபாத்தில் உள்ள தேசிய வானியல் ஆராய்ச்சி (Physical Research Laboratory) மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு புதிய

அகமதாபாத்தில் உள்ள தேசிய வானியல் ஆராய்ச்சி (Physical Research Laboratory) மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு புதிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலம், `நட்சத்திரங்களைச் சுற்றி கிரகங்களைக் கண்டுபிடிக்கும் நாடுகள் பட்டியலில்' இந்தியாவும் இணைந்துள்ளது.

இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்தப் புதிய கிரகம், துணை சனி கோள் அல்லது சூப்பர் நெப்டியூன் போன்ற கோள்களின் அளவில் பெரியதாக உள்ளது.

EPIC 211945201 or K2-236 என்ற நட்சத்திரத்தைச் சுற்றிவரும் இந்தக் கிரகத்துக்கு EPIC 211945201b or K2-236b என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

இந்த K2-236b கிரகம், பூமியைப் போன்று 27 மடங்கு எடை கொண்டதாகவும் அளவில் ஆறு மடங்கு பெரியதாகவும் உள்ளது.

இந்தக் கிரகம் தனது நட்சத்திரத்தை 19.5 நாளில் சுற்றி வருகிறது. இதன் வெளிப்புற வெப்பநிலை 600 டிகிரி செல்சியஸ் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

``பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள இடைவெளியைப் போன்று ஏழு மடங்கு குறைவாகவே இந்தப் புதிய கிரகத்துக்கும் அதன் நட்சத்திரத்துக்கும் இடைவெளி உள்ளது.

பூமியிலிருந்து 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகக் கண்டறியப்பட்ட K2-236b கிரகத்தை, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அபு மலைப் பகுதியில், அமைக்கப்பட்டுள்ள  PARAS (PRL Advance Radial-velocity Abu-Sky Search) ஸ்பெக்ட்ரோகிராப் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டது'' என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here