Pan card
ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள்
18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்களுக்கு இந்திய வருமானவரித் துறையினரால் பான் அட்டை வழங்கப்படுகிறது. நிரந்தரக் கணக்கு எண் (PAN - Permanent account number) பெற்றவர்களின் வருமானத்திற்கான ஆதாரங்களை வருமான வரித்துறை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. வருமான வரி வசூலித்தல் மற்றும் சட்டப்பூர்வமற்ற வருமானத்தைக் கண்டறிதல் போன்ற பயன்பாடுகளுக்குப் பான் அட்டை பெரிதும் உதவுகிறது. அதே சமயத்தில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண் பெற்றிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது ஆகும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகள்
எண் மற்றும் எழுத்துக்களால் ஆன 10 இலக்கம் கொண்ட அடையாள எண்ணை வருமான வரிச் சட்டப் பிரிவு 139A-ன் படி வருமானவரித் துறை வழங்குகிறது.
வழங்கப்படுகின்ற ஒவ்வொரு எண்ணும் தனித்த அடையாளத்தைக் கொண்டது. சிலர் தெரிந்தோ தெரியாமலோ ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளைப் பெறுகின்றனர். உள்நோக்கம் இல்லாமல் எதிர்பாராதவிதமாக ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விண்ணப்பிக்கும் பொழுது இரண்டு பான் எண்கள் ஒருவருக்கு ஒதுக்கப்படலாம். சிலர் வரி ஏய்ப்புச் செய்வதற்காகத் தெரிந்தே இரண்டு பான் அட்டைகளைப் பெற்றிருக்கலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளால் ஏற்படும் விளைவுகள்
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருத்தல் மோசடிக் குற்றமாகும். தங்களுடைய வாடிக்கையாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண் வைத்திருப்பதை வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்கள் கண்டறிந்தால் அந்தத் தகவலை உரிய அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துவார்கள்.
அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை
1961 ஆம் ஆண்டைய வருமான வரிச் சட்டத்தின் 272B - பிரிவின்படி, ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளைப் பெற்றிருந்தால், அதனுடைய நோக்கத்தைப் பொறுத்து அவருக்கு ரூபாய் 10,000 அல்லது அதற்கும் மேற்பட்ட தொகை அபராதமாக விதிக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளின் மூலமாக வரி ஏய்ப்புச் செய்தல்,, முறையற்ற பணப் பரிமாற்றம் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களையும் அவர்களுடைய நிறுவனங்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கிறது. வங்கி அல்லது நிறுவனங்கள் புகார் செய்தால் வாடிக்கையாளர் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண் சிக்கலைத் தீர்ப்பது எவ்வாறு
ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண்களை நீங்கள் பெற்றிருந்தால் அவற்றில் ஒன்றை நீக்கிவிட வேண்டும்.. அதற்கு வருமான வரித்துறை இணையத் தளத்திற்குச் (NSDL's website) செல்ல வேண்டும். அத்தளத்தில் உள்ள "change or correct existing PAN data" என்னும் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்குக் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் அல்லது, வருமானவரித் துறை இணையத் தளத்திலிருந்து விண்ணப்பித்தினைப் பதிவிறக்கம் செய்து அதில்i கேட்கப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்திச் செய்து அருகில் உள்ள UTI அல்லது NSDL PAN அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 8 அல்லது 10 நாட்களுக்குள் உங்களுடைய இரண்டாவது பான் எண் நீக்கப்பட்டு விடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக