பிளஸ் 1 முதல் பிரிவு பாடத்திட்டங்கள் மிக கடினம் : முதல் வால்யும் 465 பக்கங்களில் இருப்பதால் மாணவர்கள் திகைப்பு* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பிளஸ் 1 முதல் பிரிவு பாடத்திட்டங்கள் மிக கடினம் : முதல் வால்யும் 465 பக்கங்களில் இருப்பதால் மாணவர்கள் திகைப்பு*

*🔴பிளஸ் 1 முதல் குரூப் பாடத்திட்டங்களில் முக்கிய பாடங்கள் அதிக பக்கங்களில் உள்ளன. தாமதமாக கிடைத்த முதல் தொகுதியே ஒரு பாடத்திற்கு 465 பக்கங்களுக்கு தரப்பட்டுள்ளன*

*🔴இதனால் ஆண்டு முழுவதும் எப்படி படித்து தேர்வை எதிர்கொள்வது என சில மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர். நடப்பு கல்வியாண்டில் 1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன*

*🔴இதில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட பாடபுத்தகங்கள் அனைத்தும் அதிக பக்கங்களுடன் உள்ளன*

*🔴உயர்கல்வி மற்றும் மத்திய அரசின் தேர்வுகள் உள்ளிட்டவைகளை எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை தெரிவித்திருந்தது*

*🔴பாடபுத்தகங்கள் பல பள்ளிகளுக்கு குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு மிகவும் தாமதமாகவே வினியோகிக்கப்பட்டன. பள்ளிகள் திறந்து சுமார் ஒரு மாதத்திற்கு பின்னரே பலருக்கும் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் கைகளில் கிடைத்தன*

*🔴இதில் முதல் குரூப் பாடபுத்தகங்கள் மாணவர்களை திகைக்க வைக்கும் அளவிற்கு உள்ளதாக ஆசிரியர்கள், பெற்றோர் கருதுகின்றனர்*

*🔴விலங்கியல், தாவரவியல் ஆங்கில வழி பாடப்புத்தகம் முதல் வால்யும் மட்டுமே 465 பக்கங்களை கொண்டுள்ளதாக ஆசிரியர்கள் கூறினர். இதனை அரையாண்டு தேர்வுக்கு முன்னதாக முழுமையாக படித்து மனதில் கொள்வது சவாலானது*

*🔴காரணம் முழுமையாக அனைத்து பாடங்களையும் படிக்க அதிகபட்டசம் 2 முறை மட்டுமே அவகாசம் கிடைக்கும் என கணக்கிடுகின்றனர். 2ம் வால்யும் குறைந்தது 400 பக்கங்களாவது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது*

*🔴கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களும் அதிக பக்கங்களை கொண்டதாக உள்ளன. இந்த முறை புளு பிரிண்ட் என்ற மாதிரி கேள்வித்தாள் வடிவமைப்பு முறையும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது*

*🔴இதனால் பாடம் முழுவதையும் கற்று தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என சில மாணவர்கள் அச்சப்படுகின்றனர். புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு இப்போதுதான் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது*

*🔴பாடப்பளு கண்டு சில மாணவர்கள் வணிகவியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பிற்கு மாறலாமா என யோசிப்பதாகவும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்*

*🔴இந்த கல்வியாண்டில் ஏற்கனவே வழக்கத்தைவிட முதல் குரூப்பிற்கு பதிலாக வணிகவியல், வணிக கணிதம் போன்ற பாடப்பிரிவுகளுக்கு போட்டி சற்று அதிகமாக இருந்தது. சில பள்ளிகளில் 15 மாணவர்களே என்ற எண்ணிக்கையில் இருந்த வணிகவியல் பிரிவில் இந்த ஆண்டு 40 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்*

*🔴காலதாமதமாக வழங்கப்பட்ட புதிய பாடத்திட்ட புத்தகங்கள், அதிக பக்கங்களுடன் அனைத்தும் சிபிஎஸ்இக்கு சமமான கடின பாடத்திட்டங்கள், படிக்க தேவையான அவகாசம் இன்மை, புதிய தேர்வு நெறிமுறைகள் போன்ற சவால்களை மாணவர்கள் சந்திக்க இருப்பதால் இந்த கல்வியாண்டில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற நியதியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என பெற்றோரும் ஆசிரியர்களும் எதிர்பார்கின்றனர்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here