இதுகுறித்து இந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘ஆசியாவில் உள்ள இந்தியா, சீனா, ஹாங்காங், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தென்கொரியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. 2030ஆம் ஆண்டுக்குள் இந்நாடுகளின் பொருளாதார மதிப்பு சுமார் ரூ.1900 லட்சம் கோடியாக (28 டிரில்லியன் டாலர்) அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அப்போதைய அமெரிக்க பொருளாதார மதிப்பீட்டைக் காட்டிலும் அதிகமாகும். அப்போதைய அமெரிக்கப் பொருளாதாரத்தின் மதிப்பு சுமார் ரூ.1520 லட்சம் கோடியாக மட்டுமே இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.’
உலகின் பல முக்கியமான நிதி சேவைகள் அமைப்புகளும் ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு வருவதாகவும், எதிர்காலத்திலும் வளர்ச்சி மேம்படும் என்றே கூறுகின்றன.
அதேபோல ஆசிய நாடுகளில் இளைஞர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகவும், இதனால் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் இந்த நாடுகள் மிகுந்த சவாலை எதிர்கொள்ளுமென்றும் டிபிஎஸ் தனது ஆய்வில் கூறியுள்ளது.
குறிப்பாக இந்தியாவிலும், பிலிப்பைன்ஸிலும் இளைஞர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. மற்ற நாடுகளைக் காட்டிலும் இவ்விரு நாடுகளிலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மிகப்பெரிய சவாலாக இருக்குமென்று டிபிஎஸ் கூறியுள்ளது. சிங்கப்பூர், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் புதிய தொழில்நுட்பங்களை எளிதில் உள்வாங்கி, அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளாக இருக்குமென்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக