பீகாரில் மணமாகாத மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பீகாரில் மணமாகாத மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை*

*♈பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெறும் திருமணம் ஆகாத மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை பீகார் அரசு செயல்படுத்தி வருகிறது*

*♈பீகாரில் 'முதல் அமைச்சர் பெண்கள் மேம்பாட்டு திட்டம்' கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது*

*♈அதன்படி பெண் குழந்தைகளின் பிறப்பு முதல் பட்டப்படிப்பு முடியும் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் பிளஸ்-2 தேர்ச்சி பெறும் திருமணம் ஆகாத மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை அளிக்கப்படும்*

*♈பீகாரில் வரும் 6-ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. ரூ.10 ஆயிரம் உதவித்தொகை அளிப்பதற்காக பிளஸ்-2 வகுப்பில் தேர்வு பெற்ற திருமணம் ஆகாத மாணவிகள் பெயர் பட்டியலை தயாரிக்குமாறு மாவட்டங்களின் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது*

*♈கல்வியை ஊக்குவிப்பது, குழந்தை திருமணத்தை தடுப்பது, பெண்களுக்கு கல்வியறிவு மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது ஆகியவற்றுக்காக திருமணம் ஆகாத பிளஸ்-2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. திருமணமானாலும் பட்டப்படிப்பு முடிக்கும் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்'' என்று கல்வித்துறை செயலாளர் ஆர்.கே.மகாஜன் கூறியுள்ளார்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here