சிஎம்சி: 100 எம்.பி.பி.எஸ். இடங்களையும் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்ப முடிவு* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சிஎம்சி: 100 எம்.பி.பி.எஸ். இடங்களையும் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்ப முடிவு*

*🏀வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (சிஎம்சி) 100 இடங்களும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்*

*🏀மருத்துவத் தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடந்த ஜூன் 28-ஆம் தேதி வெளியிட்டபோது, முதல் முறையாக சிஎம்சி மருத்துவக் கல்லூரியின் 84 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன*

*🏀மீதம் உள்ள 16 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும்' என்று தெரிவித்தார்*

*🏀தமிழகத்தில் ஜூலை 1-ஆம் தேதி முதல் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது*

*🏀ஆனால், கலந்தாய்வின்போது கல்லூரிகளின் பட்டியலில் சிஎம்சி மருத்துவக் கல்லூரி இடம்பெறவில்லை. இதனால், சிஎம்சி மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்யும் எண்ணத்தில் வந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது*

*🏀முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் இந்தக் கல்லூரி கலந்தாய்வில் இடம்பெறுமா என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது*

*🏀இது தொடர்பாக தேர்வுக்குழு அதிகாரிகள் கூறுகையில், சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன*

*🏀இருப்பினும் தீர்ப்பு கிடைத்துள்ள வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுப்படி, சிஎம்சி மருத்துவக் கல்லூரியின் அனைத்தும் இடங்களையும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப உள்ளோம். முதல் கட்ட கலந்தாய்விலேயே இந்தக் கல்லூரியின் இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தனர்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here