மாணவர்கள் எளிதாக கற்கும் வகையில் 1,838 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு'ஜாலி போனிக்ஸ்' ஆங்கில பயிற்சி* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 1,838 பேருக்கு 'ஜாலி போனிக்ஸ்' ஆங்கில பயிற்சி வழங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் எளிதாகவும், மகிழ்ச்சியாகவும், கற்பதை எளிதாக்குவதற்காக 'ஜாலி போனிக்ஸ்' எனும் ஆங்கில பயிற்சி உருவாக்கப்பட்டது. முதன்முதலில் இந்த கற்றல் நிகழ்வு, கடந்த 2003ம் ஆண்டு டாக்டர் கோமதி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாணவர்கள் எளிதாக கற்கும் வகையில் 1,838 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு'ஜாலி போனிக்ஸ்' ஆங்கில பயிற்சி* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 1,838 பேருக்கு 'ஜாலி போனிக்ஸ்' ஆங்கில பயிற்சி வழங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் எளிதாகவும், மகிழ்ச்சியாகவும், கற்பதை எளிதாக்குவதற்காக 'ஜாலி போனிக்ஸ்' எனும் ஆங்கில பயிற்சி உருவாக்கப்பட்டது. முதன்முதலில் இந்த கற்றல் நிகழ்வு, கடந்த 2003ம் ஆண்டு டாக்டர் கோமதி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆங்கிலம் கற்பித்தல் சிறந்த முறை என இதன் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது. இம்முறையில் ஆங்கிலம் எழுத்து வடிவமாக இல்லாமல் ஒலி வடிவமாக கற்பிக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் உள்ள 42 ஒலிகளும் கதை, பாட்டு, விளையாட்டு மற்றும் செய்கைகள் மூலமாக தொடக்க நிலை மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

மாதிரி கற்றலானது நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டது. இந்த முறை மாணவர்களிடையே ஆங்கிலத்தை கற்பதில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது.

அதனைத் தொடர்ந்து இம்முறை தஞ்சாவூர், கடலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பிஎஸ்வி பொறியியல் கல்லூரி மையத்தில் நடந்த 2 நாள் பயிற்சியினை முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

உதவி திட்ட அலுவலர் நாராயணா, மாவட்ட கல்வி அலுவலர்கள் சுப்பிமணியன், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது ஜாலி போனிக்ஸ் அமைப்பின் மூலம் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இலவச ஆசிரியர் வழிகாட்டி கையேடுகளும், மாணவர் பயிற்சி ஏடுகளும் வழங்கப்பட்டன.

பயிற்சி வழங்கும் கருத்தாளர்களுக்கான அனைத்து செலவினத்தையும் நிறுவனமே ஏற்று செலவிடுகிறது.

இப்பயிற்சியை கருத்தாளர்களுடன் ஒருங்கிணைந்து நிறுவனத்தின் தலைமை பயிற்சியாளர் டாக்டர் கோமதி வழி நடத்துகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here