வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவர் தனது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை, மகளிர் நூலகத்துக்கு தானமாக அளித்துள்ளார்.
பிச்சனூர் அழகுபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் புலவர் கா.நடராஜன். தனது மனைவி மலர்க்கொடி காலமான பிறகு, குழந்தைகள் இல்லாததால் உறவினர்கள் வீட்டில் வசித்து வருகிறார். தனது சொத்துக்களை உறவினர்களுக்கு கொடுத்துவிட்ட நடராஜன், ஒய்வூதியத்தைக் கொண்டு அன்றாட செலவுகளை கவனித்துக் கொள்கிறார். இந்நிலையில், தனது பெற்றோர், உடன்பிறந்தவர்களுடன் தான் வாழ்ந்து வந்த வீட்டை நூலகத்துக்கு தானமாக கொடுக்க முடிவு செய்து, தமிழக அரசின் பெயரில் தானம் எழுதிக் கொடுத்தார்.
அந்த வீட்டில் வரும் ஞாயிறன்று மகளிர் நூலகம் தொடங்கப்பட உள்ளது. இந்த நூலத்துக்கு தனது தந்தையும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான கா.செ.காளியப்பனின் பெயரை சூட்ட வேண்டும் என நடராஜன் நூலகத்துறையிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக