பட்டியல் பிரிவினருக்கான ஊக்கத் தொகை நிறுத்தம்! நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உயர் கல்வி பயின்றுவரும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ஊக்கத்தொகையை நிறுத்தியுள்ளது தமிழக அரசு. 2010ஆம் ஆண்டு  - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பட்டியல் பிரிவினருக்கான ஊக்கத் தொகை நிறுத்தம்! நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உயர் கல்வி பயின்றுவரும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ஊக்கத்தொகையை நிறுத்தியுள்ளது தமிழக அரசு. 2010ஆம் ஆண்டு 



2010ஆம் ஆண்டு உயர் கல்விக்கான ஊக்கத்தொகை (Post Matriculation Scholarship) மத்திய அரசின் உதவியுடன் தமிழகத்திலுள்ள பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு, இதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மாற்றியமைத்தது. இதனை எதிர்த்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

கடந்த ஜூலை 4ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த கூடுதல் நிதிச்சுமையை மாநில அரசினால் ஏற்க முடியாது என்றும், ஊக்கத்தொகை விதிமுறைகளை திருத்த முடியாது என்றும் அறிவித்தார். இதற்கு மாறாக, கடந்த ஜூலை 9ஆம் தேதியன்று தமிழக ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத் துறை ஆணை வெளியிட்டது. இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

என்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட முதன்மைக்கல்வியைப் பெறும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் படிப்புத் தொகை, பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்க இந்த ஊக்கத்தொகை திட்டம் உதவிகரமாக இருக்கும். 2010ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட விதிமுறைகளின் படி, மாநில அரசுகள் மத்திய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தைச் செயல்படுத்துபவையாகவே இருந்தன. ஆனால், இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடை தாமதப்படுத்தி வந்தது மத்திய அரசு. 1,690 கோடி வேண்டுமென மாநில அரசு கேட்ட நிலையில், 430 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.

இந்த நிலையில், கடந்த மே மாதம் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையானது இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கான நெறிமுறைகளில் மாற்றம் செய்தது. நிர்வாக ஒதுக்கீடு மற்றும் களச் சேர்க்கை முறையில் இடங்களைப் பெற்ற மாணவர்கள் இந்த ஊக்கத்தொகையைப் பெற்றிருந்தால், அதனைத் திரும்பச் செலுத்த வேண்டுமென்று இதில் கூறப்பட்டிருந்தது.

“மாநில நிதித் துறையானது வெளிப்படையாகவோ அல்லது உள்நோக்கத்துடனோ 2018ல் திருத்தப்பட்ட நெறிமுறைகளைத் தவிர்த்தது அல்லது அந்த வரிகளுக்கு இடையே அதனை வாசித்தது” என்று கூறுகிறார் தமிழக அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் கிறிஸ்துதாஸ் காந்தி. அரசு கட்டண நிர்ணயக் குழுவின் கண்காணிப்பில் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் வருமென்று புதிய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்த நிறுவனங்களில் நிர்வாக ஒதுக்கீடு செய்யப்படும் கல்வியிடங்கள் இந்த கட்டண நிர்ணயக் குழுவின் கண்காணிப்பில் நிரப்பப்படும். நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் இந்த வரம்புக்குள் அடங்காது.

“திருத்தப்பட்ட நெறிமுறைகளில் நிர்வாக ஒதுக்கீடு என்ற சொல்லைத் தெளிவாகக் குறிப்பிட்டு ஆணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு. அதனால், 2018ஆம் ஆண்டு மத்திய அரசு திருத்தம் செய்த நெறிமுறைகளையே மாநில அரசு சார்ந்திருக்கும் என்றும், அதற்கு எதிராக எதுவும் செய்யாது என்றும் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார் கிறிஸ்துதாஸ் காந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here