தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட விதம்! கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று தாய்லாந்து நாட்டின் சியாங் ராய் மாகாணத்திலுள்ள தாம் லுவாங் குகைக்குள் சென்றனர் மூ பா எனும் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள். அந்த அணியின் பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங் இவர்களை அழைத்துச் சென்றார். திடீரென்று குகைக்குள் வெள்ளம் பாய்ந்ததால் இவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. அவர்கள் கொண்டுவந்த சைக்கிள்கள் குகை வாசலில் இருந்ததை வைத்து, அப்பகுதியில் உள்ளவர்கள் அவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டதைக் கண்டுபிடித்தனர். சுமார் இரண்டு வார காலமாக, அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது தாய்லாந்து அரசு. சுமார் நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த குகைக்குள் நீரும் சகதியும் தேங்கியிருப்பதால் மீட்புப் பணிகளில் பெரிய அளவில் முன்னேற்றமில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மீட்புப்படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர். இவர்களது உதவியோடு, நேற்று (ஜூலை 8) மாலை தாய்லாந்து நேரப்படி 5.40 முதல் 7.30 மணி வரை நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இது - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட விதம்! கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று தாய்லாந்து நாட்டின் சியாங் ராய் மாகாணத்திலுள்ள தாம் லுவாங் குகைக்குள் சென்றனர் மூ பா எனும் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள். அந்த அணியின் பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங் இவர்களை அழைத்துச் சென்றார். திடீரென்று குகைக்குள் வெள்ளம் பாய்ந்ததால் இவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. அவர்கள் கொண்டுவந்த சைக்கிள்கள் குகை வாசலில் இருந்ததை வைத்து, அப்பகுதியில் உள்ளவர்கள் அவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டதைக் கண்டுபிடித்தனர். சுமார் இரண்டு வார காலமாக, அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது தாய்லாந்து அரசு. சுமார் நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த குகைக்குள் நீரும் சகதியும் தேங்கியிருப்பதால் மீட்புப் பணிகளில் பெரிய அளவில் முன்னேற்றமில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மீட்புப்படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர். இவர்களது உதவியோடு, நேற்று (ஜூலை 8) மாலை தாய்லாந்து நேரப்படி 5.40 முதல் 7.30 மணி வரை நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இது


தாய்லாந்து தாம் லுவாங் குகையில் இருந்து நேற்று நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று மீதமுள்ள 9 பேரை மீட்கும் நடவடிக்கையிலும் சம்பந்தப்பட்ட மீட்புப் படையினரே ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளது தாய்லாந்து அரசு.

கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று தாய்லாந்து நாட்டின் சியாங் ராய் மாகாணத்திலுள்ள தாம் லுவாங் குகைக்குள் சென்றனர் மூ பா எனும் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள். அந்த அணியின் பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங் இவர்களை அழைத்துச் சென்றார். திடீரென்று குகைக்குள் வெள்ளம் பாய்ந்ததால் இவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. அவர்கள் கொண்டுவந்த சைக்கிள்கள் குகை வாசலில் இருந்ததை வைத்து, அப்பகுதியில் உள்ளவர்கள் அவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டதைக் கண்டுபிடித்தனர். சுமார் இரண்டு வார காலமாக, அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது தாய்லாந்து அரசு.

சுமார் நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த குகைக்குள் நீரும் சகதியும் தேங்கியிருப்பதால் மீட்புப் பணிகளில் பெரிய அளவில் முன்னேற்றமில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மீட்புப்படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர். இவர்களது உதவியோடு, நேற்று (ஜூலை 8) மாலை தாய்லாந்து நேரப்படி 5.40 முதல் 7.30 மணி வரை நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இது, மீட்புப்படையில் ஈடுபட்டிருப்பவர்களைச் சிறிது ஆசுவாசப்படுத்தியுள்ளது. நான்கு சிறுவர்களும் சியாங் ராய் தலைநகரிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களது உடல்நலம் மோசமடையவில்லை என்றாலும், அவர்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது தாய்லாந்து அரசு.

குகையிலிருந்து சிறுவர்களை மீட்ட மீட்புப் படையினர் தங்களது உடல்களுக்கு அடியில் சிறுவர்களைப் பாதுகாப்பாக வைத்து அழைத்து வந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் சேவையை அளித்துள்ளனர். உடல்நலனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக இவர்கள் நால்வரையும் மீட்பது என்று முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இவர்கள் மீட்கப்பட்டனர். அப்போது குகையில் நீர்வரத்தும் குறைவாக இருந்துள்ளதால், அவர்களை மீட்கும் நடவடிக்கையில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டதை வரவேற்ற சியாங் ராய் மாகாண ஆளுநர் நாரோங்சக் ஒஸ்தனகோன், நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மீதமுள்ளவர்களை மீட்கத் தகுந்த சூழல் அமைந்தால் மட்டுமே நடவடிக்கைகள் தொடங்கும் என்று கூறினார்.

இன்றுடன் (ஜூலை 9) தாம் லுவாங் குகைக்குள் கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் சிக்கி 17 நாட்கள் ஆகின்றன. தாய்லாந்து நேரப்படி, இன்று காலை 9 மணி முதல் மீட்புப் படையினரின் பணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து உள்துறை அமைச்சர் அனுபோங் பௌஜிந்தா, நான்கு சிறுவர்களைக் காப்பாற்றிய வீரர்களே இன்று மீண்டும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். குகையின் நிலைமை மற்றும் சிறுவர்களின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு, அவர்கள் எளிதாக முடிவெடுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம் என்று கூறியுள்ளார். அதோடு, அவர்கள் நீரில் மூழ்கிச்செல்வதற்குத் தேவையான ஆக்சிஜனை நிரப்பும் பணி முடிவடைய சில மணி நேரங்கள் ஆகுமென்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை தாய்லாந்து அதிகாரிகள் மீதமுள்ள 9 பேரை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.

தாய்லாந்து வானிலைத் துறை, இன்று தாம் லுவாங் குகைப்பகுதியில் மழை பொழிய 60 சதவீத வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 19 வீரர்கள் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப். அனுபவமிக்க மயக்கமருந்து நிபுணரான ரிச்சர்ட் ஹாரிஸ் இந்தக் குழுவில் இருப்பதாகக் கூறியுள்ளார். “தாய்லாந்து குகையிலிருந்து சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களோடு சேர்ந்து பணியாற்றும் ஹாரிஸ், யார் யாரை உடனடியாக அப்புறப்படுத்துவது என்று முடிவெடுக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்” என்று தெரிவித்துள்ளார் ஜூலி பிஷப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here