இரண்டு மாதங்களில், இலவச இணையதள, 'வைபை' வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது*
*🌐தமிழகத்தில் உள்ள, கல்வியில் பின்தங்கிய, 13 மாவட்டங்களில் உள்ள, 366 அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு, 9.06 கோடி ரூபாய் மதிப்பில், இலவச இணையதள, வைபை வசதி ஏற்படுத்த, அரசுஒப்புதல் அளித்தது*
*🌐இதில், முதல் கட்டமாக, 50 அரசு மேல் நிலைப்பள்ளிகளில், 1.23 கோடி ரூபாய் செலவில், வைபை சேவை வசதி வழங்க,நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.இதற்கான பணிகளில், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் ஈடுபட்டுள்ளது*
*🌐இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது*
*🌐அரசு மேல்நிலை பள்ளிகளில், இலவச இணையதள, வைபை வசதி வழங்கும் திட்டத்தை, 2017ல், தமிழக அரசு, அறிவித்தது*
*🌐தற்போது, இதற்கானநிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.முதல் கட்டமாக, 50 அரசு மேல்நிலைப் பள்ளி களில் சேவை வழங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது*
*🌐விரைவில் ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டு, இரண்டு மாதங்களில், பள்ளிகளுக்கு, இலவச, வைபை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் துரிதமாக நடந்துவருகின்றன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக