பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 31-07-2018 *School Morning Prayer Activities - ( Daily Updates... )* *திருக்குறள்*  *பழமொழி* *பொன்மொழி* *இரண்டொழுக்க பண்பாடு* *இன்று* *பொது அறிவு* *நீதிக்கதை* *இன்றைய செய்தி துளிகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 31-07-2018 *School Morning Prayer Activities - ( Daily Updates... )* *திருக்குறள்*  *பழமொழி* *பொன்மொழி* *இரண்டொழுக்க பண்பாடு* *இன்று* *பொது அறிவு* *நீதிக்கதை* *இன்றைய செய்தி துளிகள்




பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

 உரை:
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

பழமொழி :

A teacher is better than two books

ஒரு ஆசிரியர் இரு புத்தகங்களை விட மேலானவர்

பொன்மொழி:

ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது.

- சாமுவேல் பட்லர்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?
பைன்

2.உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்?
மார்ச் 22

நீதிக்கதை :

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு



கோவில் கோபுரத்தில் சில நீல நிறப்புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் அடைக்கலமாகி இருந்து வந்தன.

கோபுரத்தில் கும்பாபிஷேக வேலை கள் தொடங்க ஆரம்பித்ததால் இது நாள் வரை எதிரும் புதிருமாக இருந்து வந்த இருவகைப் புறாக் கூட்டமும் இப்போது ஒன்று கூடி வேறொரு இடம் தேடி புறப்பட்டன.

செல்லும் வழியில் ஓரிடத்தில் வெயிலில் உலர்த்துவதற்காக பரப்பப்பட்ட தானியங்களை கண்டதும் அனைத்தும் ஒன்று கூடி தானியங்களை தின்று தீர்த்து விட்டு மரக்கிளை ஒன்றில் அமர்ந்தன.

தானியத்தை உலர்த் தும் பொருட்டு பரப்பி விட்டு சென்ற வேடன் தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சி யடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.

நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் தயார் செய்து வலை விரித்தான்.

அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலை களில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் புறாக்கள் எல்லாம் ஒன் றாக இறக்கையை விரித்து பறக்க, வலையோடு புறாக்கள் பறக்க ஆரம்பித்தன.

உடனே வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.

பறந்து செல்லும் போதே, அதில் இருந்த வெள்ளைப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின.

உடனே நீல நிறப் புறாக்களும் தன் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக் கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்ததினால், அதன் பறக்கும் வேகம் குறைய ஆரம் பித்து, ஒரு மரக்கிளையில் வலை சிக்கிக் கொண்டது.

இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக “ஒற்றுமை நீங்கினால் அனை வருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

நீதி: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...

இன்றைய செய்தி துளிகள் :

1.கணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்து மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

2.பள்ளிகளில் மதிய உணவுடன் பால் - மத்திய அரசு ஒப்புதல்!

3.கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.

4.செவ்வாய்க் கிரகத்தில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ள மிகப்பெரிய ஏரி!

5.1000-மாவது டெஸ்டில் களமிறங்க உள்ள இங்கிலாந்து..... வாழ்த்து தெரிவித்த ஐசிசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here