
தமிழகத்தில் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை பொறியியல் கலந்தாய்வை நடத்திக்கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான அவகாசத்தை ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரத்தால் மருத்துவக் கலந்தாய்வு முடிவடையாமல் இருப்பதையும், மருத்துவக் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்றும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எல் நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (ஜூலை 20) விசாரணைக்கு வந்தது. அப்போது, பொறியியல் கலந்தாய்வை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடத்திக்கொள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக