அகில இந்திய போட்டியில் தங்கம் வென்றார் பட்டுக்கோட்டை மாணவி லோகபிரியா உலக வலுதூக்கும் போட்டிக்கு தகுதி* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அகில இந்திய போட்டியில் தங்கம் வென்றார் பட்டுக்கோட்டை மாணவி லோகபிரியா உலக வலுதூக்கும் போட்டிக்கு தகுதி*

*🔶அகில இந்திய  வலுதூக்கும் போட்டி ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட வீரர்களும், 250க்கும் மேற்பட்ட வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்*

*🔶தமிழகம் சார்பாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பெரியார் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அதிராம்பட்டினம் காதர்முகைதீன் கல்லூரியில் பிபிஏ இரண்டாமாண்டு படிக்கும் மாணவி எஸ்.லோகபிரியா  57 கிலோ உடல் எடைபிரிவில் 357.5கிலோ கிலோ எடையை தூக்கி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்*

*🔶அதே பெரியார் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு  படிக்கும் மாணவர் கே.கோகுல்பிரசாத் 93 கிலோ உடல் எடைபிரிவில் 510 கிலோ எடையை தூக்கி நான்காமிடம் பெற்றார்*

*🔶இவர்களை பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. சேகர், நகர அதிமுக செயலாளர் சுப ராஜேந்திரன், தஞ்சை மாவட்ட வலுதூக்கும் சங்க செயலாளர் ஜலேந்திரன், வழக்கறிஞர் அண்ணாதுரை, கில்பர்ட், அகில இந்திய வலுதூக்கும் வீரரும், நடுவருமாகிய ரவிச்சந்திரன்,  பல்கலைக்கழக ஆணழகன் வழக்கறிஞர் ராஜ்குமார் ஆகியோர் பாராட்டினர்*

*🔶தங்கப்பதக்கம்  வென்ற மாணவி லோகபிரியா  தென்னாப்பிரிக்காவில் வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் 6 வரை நடைபெறவிருக்கும் உலக வலுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here