பிரசவத்தின்போது அன்னையர் இறப்பதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் ஆக்சிடோசின் (Oxcytocin) மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அந்தத் தடை வரும் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
பசுக்கள் அதிகமாகப் பால் சுரக்க ஆக்சிடோசின் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் இந்த மருந்து தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் அலுவலகமே தொடர்ந்து பல முறை கூட்டங்கள் நடத்தி ஆக்சிடோசின் உற்பத்தியைத் தடை செய்வதற்கு விவாதித்துள்ளது. இந்த மருந்து உற்பத்திக்கான தடை முதலில் இம்மாதத்தின் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஏதோ காரணங்களால் செம்படம்பர் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் மருந்து பிரசவித்த பின்னர், ரத்தப் போக்கு ஏற்படாமல் இருக்கவும் அன்னையர் இறப்பைத் தவிர்க்கவும் பிரசவ வலியைத்துாண்டவும் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் இது கா்ப்பிணிப் பெண்களின் உயிர்காக்கும் மருந்தாகும்.
இது தொடர்பாக, கேரளாவைச் சார்ந்த மருத்துவர் பாபு, “எந்த அறிவிப்புமின்றி ஆக்சிடோசின் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இப்படித் தடை விதிக்க அவசரம் ஏன்? மனித உயிர்களைவிட மாடுகள் அவ்வளவு முக்கியமானதாகப் போய்விட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மருந்துக்கான உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதை முதலில் கண்டறிந்தவர் இவர்தான்.
மத்திய அரசு கா்நாடாகவிலுள்ள மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை (Karnataka Antibiotics and Pharmaceuticals Limited (KAPL)மட்டுமே இந்த மருந்தை தயாரிக்கும் என்று கூறியிருந்தது, ஆனால் அங்கும் மருந்து உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக