இன்று உலக ஹெப்பாட்டைட்டிஸ் தினம் (World Hepatitis Day). ஹெப்பாட்டைட்டிஸ் (ஈரல் அழற்சி நோய்) பற்றிய சில தகவல்கள்:
1. உலக அளவில் 150 மில்லியன் மக்கள் நாள்பட்ட ஹெப்பாட்டைட்டிஸ் சி-யால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
2. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் ஹெப்பாட்டைட்டிஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
3. ஹெப்பாட்டைட்டிஸ் சி-யைத் தடுப்பதற்கு தடுப்பூசிகள் கிடையாது.
4. ஹெப்பாட்டைட்டிஸ் சி வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட 10-20 வருடங்களுக்கு எவ்வித அறிகுறிகளும் தெரிவது கிடையாது.
5. ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில்தான் ஹெப்பாட்டைட்டிஸ் சம்பந்தமான நோய்களால் அதிகமான நபர்கள் இறந்துபோகிறார்கள்.
6. உலக அளவில், கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவில் ஹெப்பாட்டைட்டிஸ் சி-யால் 52% மரணம் நிகழ்கிறது.
7. ஹெப்பாட்டைட்டிஸ் சி பாதிப்புடைய 95% மக்களை இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் குணப்படுத்திவிடலாம்.
8. ஹெப்பாட்டைட்டிஸ் வைரஸ் A,B,C,D, E என ஐந்து வகைப்படும்.
9. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 40 மில்லியன் மக்களுக்கு ஹெப்பாட்டைட்டிஸ் பி பாதிப்பும் 6-12 மில்லியன் மக்களுக்கு ஹெப்பாட்டைட்டிஸ் சி பாதிப்பும் இருக்கிறது.
10. தாய்ப்பால், உணவு, நீர், அணைத்தல், முத்தமிடுதல், உணவைப் பகிர்ந்துகொள்ளுதல் மூலமாக ஹெப்பாட்டைட்டிஸ் சி வைரஸ் பரவாது.
- ஆஸிஃபா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக