*🔶நாடு முழுவதும், கடந்த ஜூன் மாதம் நடந்த, தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது*
*🔶ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ், நாடு முழுவதும் செயல்படும் வேளாண் பல்கலைகள் மற்றும் நிறுவனங்களில், பல்வேறு வேளாண் படிப்புகள் வழங்கப்படுகின்றன*
*🔶இவற்றில், இளநிலை படிப்புகளில், 15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 25 சதவீத இடங்கள், அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வுகள் மூலம், இட ஒதுக்கீடு முறையில் நிரப்பப்படுகின்றன*
*🔶நடப்பாண்டு, தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகளுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 18 முதல், ஜூன், 3ம் தேதி வரை நடந்தது*
*🔶நாடு முழுவதும், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான தேர்வு, ஜூன், 22ம் தேதியும்; இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, ஜூன், 23ம் தேதியும் நடந்தன*
*🔶சென்னை, தனியார் கல்லுாரி தேர்வு மையத்தில் நடந்த, இளநிலை படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வில், மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில், பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன.தேர்வு மையத்தில் தேர்வெழுதிய, 32 மாணவர்களும், வினாக்களுக்கு முழுமையாக விடையளிக்க முடியாமல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது*
*🔶இதுகுறித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், 'அகில இந்திய வேளாண் ஒதுக்கீடுகளுக்கு, மறுதேர்வு நடத்த வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது*
*🔶இதை தொடர்ந்து, ஜூன் மாதம் நடந்த, தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது*
*🔶ஐ.சி.ஏ.ஆர்., நிறுவன விஞ்ஞானி, முத்தமிழ் செல்வன் கூறியதாவது*
*🔶ஐ.சி.ஏ.ஆர்., சார்பில் நடப்பாண்டு நடத்தப்பட்ட, இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான, தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகள், அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மறு தேர்வுகளுக்கான தேதி, ஐ.சி.ஏ.ஆர்., இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்*
*🔶தேர்வுகள் தொடர்பான தகவல்களுக்கு, 011 - 25843635, 011 - 25846033 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக