*📗சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன,'' என, பள்ளிக்கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்தார்*
*📗சேலம் மாவட்டம், ஓமலுாரில், பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் தலைமையில் நேற்று, புதிய பாடத் திட்டம் குறித்து, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது*
*📗வழக்கமாக பாட புத்தகங்கள் எழுதும் பணியை, ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனரும் சேர்ந்து செய்வர். இந்த முறை, இது மாற்றப்பட்டு, பாடப் புத்தகம் எழுதுவது, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது*
*📗துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளை எளிதாக கையாளும் வகையில், தெரிந்த சொற்களை கொண்டு, அகர வரிசையில் பாடம் நடத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது*
*📗ஒன்று முதல் எட்டு வரை பயிலும் மாணவர்கள், எதில், பலவீனமாக உள்ளனர் என்பதை ஆராய்ந்து, புதிய பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வில், பிளஸ் 1 பாடத்திலிருந்து, 50 சதவீதம் கேள்விகள் கேட்கப்படுகின்றன*
*📗இதில், 99 சதவீத கேள்விகள், நமது புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது*
*📗இதனால், சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன*
*📗பிளஸ் 1 பாட புத்தகத்தில், அனைத்து பாட பிரிவினருக்குமான மேற்படிப்புகள் குறித்தும், அதை எங்கு படிக்கலாம் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது*
*📗புதிய பாடத் திட்டத்தின் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில், தமிழக மாணவர்கள், அகில இந்திய போட்டி தேர்வுகளில், அதிக அளவில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவர். மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது, ஆசிரியர்கள் கையில் உள்ளது என்றார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக