கிராம மக்களின் தாராள மனசு; 'டிஜிட்டலாகிய' அரசு பள்ளி* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கிராம மக்களின் தாராள மனசு; 'டிஜிட்டலாகிய' அரசு பள்ளி*


*🎯சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் நகரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியை கிராம மக்கள் 'டிஜிட்டல்' மயமாக்கினர்*
*இப்பள்ளி 1954 ல் துவங்கப்பட்டது*

*🎯மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 2 ஆண்டுகளுக்கு முன், 28 பேர் மட்டுமே இருந்தனர்*

*🎯பள்ளி கட்டடங்கள் மோசமாக இருந்ததால் பலர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்*

*🎯முன்னாள் மாணவர்கள், கிராம மக்கள் இணைந்து கட்டடங்களை சீரமைத்து, மின்வசதி ஏற்படுத்தி கொடுத்தனர்*

*🎯மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர துவங்கியது. தற்போது நகரம்பட்டி, அம்மன்பட்டி, வீழனேரி, அழகாபுரி, ராமலங்கபுரம் கிராமங்களைச் சேர்ந்த 45 பேர் படிக்கின்றனர்*

*🎯ஆறு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்*

*🎯இந்த ஆண்டு 4 லட்சம் ரூபாயில் 'டிஜிட்டல்' வகுப்பை கிராம மக்கள்*
*ஏற்படுத்தி*
*கொடுத்தனர்*

*🎯அதில் 'ஆன்லைனில்' இயங்கும் 'ஸ்மார்ட் போர்டு,' கணினி, இருக்கைகள் போன்ற வசதிகள் உள்ளன*

*🎯தலைமைஆசிரியர் வள்ளியம்மை கூறியதாவது: 'ஸ்மார்ட்' வகுப்பில் வீடியோ, அனிமேஷன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது*

*🎯யோகா வகுப்பும் நடத்துகிறோம். ஆங்கிலவழி கல்வியும் துவங்கியுள்ளோம். கிராம மக்கள் ஒத்துழைப்பால் மாணவர்கள் குறைவது தடுக்கப்பட்டது, என்றார்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here