🔴🔴சி.பி.எஸ்.இ. பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது: உயர்நீதிமன்றம் உத்தரவு* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

🔴🔴சி.பி.எஸ்.இ. பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது: உயர்நீதிமன்றம் உத்தரவு*

*🌐சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*

*🌐கல்வி உரிமை சட்டப்படி அனைத்து சி.பி.எஸ்.இ.மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகார சான்று பெற வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது*

*🌐அரசின் ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் சி.பி.எஸ்.இ.,பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி மகாதேவன், அரசின் இந்த ஆணைக்கு கடந்த ஜூலை 10-ம் தேதி தடை விதித்திருந்தார்*

*🌐தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது*

*🌐மேல்முறையீடு வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா அமர்வு விசாரித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது*

*🌐அதில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை கட்டுப்படுத்தவும், ஆய்வு செய்யும்  தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவித்துள்ளது*

*🌐மேலும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையையும்  நீக்கம் செய்துள்ளது*

*🌐தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்த தனி நீதிபதி மகாதேவன் உத்தரவையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்துள்ளது*

*🌐கல்வி கட்டணம் நிர்ணயம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தமிழக அரசு அதில் தலையிடாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here