இரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அதனை மீறிச் சில பள்ளிகளில் வீட்டுப்பாடம் கொடுப்பதாகப் புகார்கள் வந்துள்ளது வேதனை தருகிறது - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அதனை மீறிச் சில பள்ளிகளில் வீட்டுப்பாடம் கொடுப்பதாகப் புகார்கள் வந்துள்ளது வேதனை தருகிறது - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அளிக்கும் புத்தகங்களையே தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த வேண்டுமெனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புருஷோத்தமன் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் அளிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நேற்று (ஜூலை 3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தங்களையும் இணைப்பு மனுதாரராகச் சேர்க்க பதிப்பக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு நீதிபதி கிருபாகரன் அனுமதி வழங்கினார். தற்போதுள்ள குளறுபடிகளுக்கு சிபிஎஸ்இ தான் காரணம் என்று புருஷோத்தமன் தரப்பில் வாதிடப்பட்டது. விதிகள் மீறுவது குறித்த விவரங்களை ஸ்டிங் ஆபரேஷன் மூலமாகப் பதிவு செய்துள்ளதாகவும், அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விவரங்கள் குறித்துப் பேசிய நீதிபதி கிருபாகரன், இப்போதும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதாகப் புகார்கள் வருவதாகத் தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here