அரசு தேர்வுகள் இயக்ககத்தின்
பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த தமிழக பள்ளி மாணவ மாணவிகளின் செல்போன் நம்பர், ஜாதி மற்றும் பாடப்பிரிவு உள்ளிட்ட முழுமையான விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாவட்ட மாணவர்களின் விவரங்கள் ரூ.2 ஆயிரம் ரூபாய்க்கு தனியார் நிறுவனங்கள் மூலம் விற்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும், அரசு பொது தேர்வு முடிவுகளை மாணவ ,மாணவிகளுக்கு விரைவாக அனுப்பவும், மாணவர்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது.
அதில் சம்பந்தபட்ட மாணவ, மாணவிகளின் பெயர், செல்போன் எண்கள், ஜாதி, பயிலும் பாடப்பிரிவு , வீட்டு முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்று இருக்கும். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களின் விவரங்கள் முழுமையாக திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. திருடப்பட்ட மாணவர்களின் தகவல்கள் ஒரு
என்்் தனியார் நிறுவனம் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும், கலை அறிவியல் கல்லூரிகளுக்கும், தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கும் பகிரங்கமாக விற்று வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ஒரு மாவட்ட மாணவ மாணவிகளின் விவரங்களை ரூ.2,000 - ரூ.5,000 வரை விலை வைத்து பேரம் பேசி விற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்களின் முழுவிவரங்களை பெறும் பொறியியல் கல்லூரிகள் 12-ம் வகுப்பு படிக்கின்ற மாணவ மாணவிகளை தொடர்பு கொண்டு, தேர்வுக்கு பின்னர் தங்கள் கல்லூரில் சேர தொல்லை கொடுப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அரசே முழு கல்வி செலவுகளையும் தனியார் கல்லூரிகளுக்கு வழங்கி விடுவதால் அவர்களை அடையாளம் கண்டு தொடர்பு கொள்வதற்காகவே இந்த விவரங்கள் அதிக அளவில் பெறப்படுவதாக கூறப்படுகின்றது. சமூக விரோதிகளால் ஆயிரக்கணக்கான மாணவிகளின் செல்போன் நம்பர்களும், அவர்களது வீட்டு முகவரிகளும் விலைகொடுத்து வாங்கப்பட்டால் என்ன விபரீதம் நிகழும் என்பதை யோசித்தாலே மனம் பதைபதைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக