📱📱📱அமைச்சர் செங்கோட்டையனுடன் செல்லிடப்பேசியில் பேசிய மாணவியர்* *🔶திருவாரூர் மாவட்டம், குடவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர், - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

📱📱📱அமைச்சர் செங்கோட்டையனுடன் செல்லிடப்பேசியில் பேசிய மாணவியர்* *🔶திருவாரூர் மாவட்டம், குடவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர்,


மாணவியர், அமைச்சர் ஆர். காமராஜின் செல்லிடப்பேசி வாயிலாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் பேசி, விலையில்லா சைக்கிள் வழங்குமாறு கோரிக்கை விடுத்த வைத்த சம்பவம் சனிக்கிழமை நடைபெற்றது*

*🔶திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர். காமராஜ், குடவாசல் வழியாக காரில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே மாணவியர் சிலர் பள்ளிக்கு நடந்து சென்றனர். இதைக் கவனித்த அவர், காரை நிறுத்தி கீழே இறங்கி, மாணவியரிடம் பேசினார்*

*🔶அப்போது, ஏன் நடந்து செல்லுகின்றீர்கள்? எனக் கேட்டார். இதற்கு பதிலளித்த மாணவியர், நிகழாண்டு 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் இன்னமும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர்*

*🔶உடனடியாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்ட அமைச்சர் காமராஜ், விவரத்தைக் கூறி மாணவியரையும் அவருடன் பேச வைத்தார். அதன்படி, தங்களது கோரிக்கைகளை மாணவியர் அமைச்சரிடம் தெரிவித்தனர்*

*🔶இதை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்*

*🔶எதிர்பாராத இந்த சம்பவத்தால் மாணவியர் மகிழ்ச்சியடைந்தனர்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here