சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று (ஜூலை 14) இரண்டு பள்ளி மாணவர்கள் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் என்பவரின் மகன் காட்வின்(7) இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் வீட்டில் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது காணவில்லை இதனைத்தொடர்ந்து மாணவரின் தந்தையான தமிழ்வாணன் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளனர்.
இதேபோல ஜெயந்தி என்பவரின் மகன் சசி குமார்(9) வீட்டி அருகே விளையாடிக்கொண்டிருந்தவன் நேற்று மாலையில் இருந்து காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது,பொதுமக்கள் மத்தியில் குழந்தை கடத்தல் பீதி இருக்கின்ற நிலையில் வண்ணாரப்பேட்டையில் நேற்று ஒரே நாளில் இரண்டு பள்ளி மாணவர்கள் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக