1 இதய ஆபரேஷனுக்காக வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக அளித்தார் கரூரை சேர்ந்த சிறுமி.
2 ஆகஸ்டு 1 முதல் 17-ந் தேதி வரை அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளில் ரூ.2,409 கோடியை முதலீடு செய்துள்ளனர்.
3 நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, ஜூலை மாதத்தில், ரூபாய் மதிப்பில் 16 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.
4 நடப்பு நிதி ஆண்டில் (2018-19) இந்தியாவின் நடப்புக்கணக்கு பற்றாக்குறை 2.8 சதவீதமாக அதிகரிக்கும் என நோமுரா நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
5 நம் நாட்டில், நடப்பு நிதி ஆண்டின் முதல் 4 மாதங்களில் (ஏப்ரல்-ஜூலை) உச்ச பயன்பாட்டு நேரத்தில் மின்சார பற்றாக்குறை 0.9 சதவீத அளவிற்கே இருந்ததாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
6 ஜூலை மாதத்தில் முந்திரி (பருப்பு) ஏற்றுமதி, ரூபாய் மதிப்பு அடிப்படையில் 27 சதவீதம் சரிவடைந்து ரூ.431 கோடியாக குறைந்து இருக்கிறது.
7 கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனுப்பி வைத்தார்
8 உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை - வைகோ பேட்டி
9 கோவை விபத்தில் மூளைச்சாவு அடைந்த உதவி பேராசிரியரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெறுகின்றனர்.
10 காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் டெல்டா மாவட்டத்தின் கடைமடைக்கு தண்ணீர்போய் சேராததற்கு தமிழக அரசு தான் காரணம்’ என்று கோவை பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டினார்.
11 உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் தலிபான்களுடன் நவம்பர் வரை 3 மாதகால போர் நிறுத்ததுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அழைப்பு விடுத்துள்ளார்.
12 பக்ரீத் பண்டிகை விடுமுறை நாளை ஆகஸ்ட் 22-லிருந்து 23-ம் தேதிக்கு முன்னர் மாற்றிய மத்திய அரசு தற்போது மீண்டும் 22-ம் தேதிக்கு மாற்றி விடுமுறை அறிவித்துள்ளது.
13 பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டுமென்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசும் ஓய்வூதிய திட்டம் பற்றிய அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் கமிட்டி அமைத்து உள்ளது.
14 ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சூரியசக்தியை திரவநிலையில் சேமிப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
15 கிகி’ நடன சவால், ‘மோமோ’ சவால்களுக்கு இடையே விஞ்ஞானிகள் ஹெர்குலியன் சவாலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
16 புதிய உறுதியான உலோக கலவையை உருவாக்கிய விஞ்ஞானிகள் தங்கமும், பிளாட்டினமும் கலந்த அதிக உறுதி கொண்ட புதிய உலோக கலவையை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
17 எலிகளின் மீது நடந்த ஆராய்ச்சியில் குருடாய் பிறந்த எலிக்குஞ்சு மரபணு கருவிழி செல்களால் பார்வை பெற்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது.
18 அமெரிக்க கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து ஏழாவது வாரமாக சரிவிலும் மற்றும் ஐரோப்பாவை மையப்படுத்தி வர்த்தகமாகும், பிரென்ட் கச்சா எண்ணெய், மூன்றாவது வாரமாகவும் சரிவில் வர்த்தகமாகி வருகிறது.
19 கேரளாவில் வெள்ள நிவாரண பணிகளில் சீக்கியர்களும், சீக்கிய அமைப்புகளும் பெரிய அளவில் உதவி இருக்கிறார்கள். அவர்களுக்கு கேரளா மக்கள் பெரிய அளவில் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
20 தாவூத் இப்ராகிமின் ரூ.8 ஆயிரம் கோடி சொத்துக்களை நிர்வகித்த ஜபீர் மோதி கைது செய்யப்பட்டு உள்ளார்.
21 பாகிஸ்தான் பிரதமராக கடந்த 18ம் தேதி பதவியேற்றுக் கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், முதன் முறையாக மக்களிடையே உரையாற்றினார். அப்போது, இனி அண்டை நாடுகளுடனான உறவை வலுப்படுத்தப்படும், இதற்கான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுக்கும், குழந்தைகள் மீதான பாலியல் பலாத்கார குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து குற்றங்களும் கட்டுப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
22 மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மக்களுக்காகவே வாந்தவர் என டெல்லியில் இன்று நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
23 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதனால், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
24 முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு 2 திரைப்படங்களாக உருவாக உள்ளது. இந்நிலையில், பிரபல இயக்குனர் பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க உள்ளார். ஆதித்யா பரத்வாஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு 'அம்மா: புரட்சித் தலைவி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. வரும் டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், அப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பார் என்று தெரிகிறது.
25 பாகிஸ்தானின் புதிய பிரதம மந்திரியாக இம்ரான் கான் பொறுப்பேற்றதை தொடர்ந்து அவரது மந்திரி சபையும் உடனடியாக பதவியேற்றுள்ளது. 16 அமைச்சர்கள் மற்றும் பிரதமரின் ஆலோசகர்களாக 5 பேர் பொறுப்பேற்றுள்ளனர். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் செயல்பாடுகளை தொடங்க இம்ரான் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
26 பருவநிலை மாற்றம் காரணமாக கடலின் மட்டம் உயரும் ஆபாயம் உள்ளதாக ஆராய்ச்சியின் முடிவில் நிபுணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு சான்றாக தெற்கு சீனாவின் மகாயூ கடலின் நீர்மட்டம் 1.5 முதல் 3 அடி உயர்ந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடல் மட்டம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உறுதி என்று டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 16,17ம் தேதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் ஸ்டெர்லைட் ஆலை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மாசடைந்து, பாதிக்கப்பட்டள்ளது என்பது உறுதியாகியுள்ளது
28 மூன்றாவது முறையாக இலங்கையின் அதிபராக பதவியேற்பேன் என ராஜபக்சே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சே, இரண்டு முறை மட்டுமே ஒருவர் அதிபராக பதவி வகிக்க முடியும் என்ற சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழங்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அதில் தங்களது தரப்பு வெற்றி பெறும் என தான் நம்புவதாக கூறியுள்ளார்.
29 சமூகவலைதளங்கள் மற்றும் இணைய வழி குற்றங்களை தடுக்கும்விதமான புதிய சட்ட மசோதா எகிப்த் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி இணையத்தை தவறுதலாக பயன்படுத்துபவர்களுக்கு குறைந்த பட்சமாக அபராதமும், அதிகபட்சமாக சிறை தண்டனையும் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. எகிப்த் அரசின் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
30 பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட இம்ரான் கானுக்கு இந்திய பிரதமர் மோடி இன்று கடிதம் அனுப்பியிருந்தார். அதில், இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைதயை தொடங்குவது தொடர்பாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் புதிய முடிவுகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக