2014-ம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு
சம்பளத்தில் 3 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதற்கானஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறை செயலாளர் சொர்ணா வெளியிட்டுள்ளஅரசாணையில் கூறியிருப்பதாவது:-
அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்ற மறுநாள் ஊதியஉயர்வுக்கான நாளாக இருக்கும்பட்சத்தில்அவர்களுக்கு சம்பளத்தில் 3 சதவீத உயர்வைவழங்கலாம் என்று 2014-ம் ஆண்டு அரசாணைபிறப்பிக்கப்பட்டது. 2014 டிசம்பர் 31-ந்தேதி முதல் இந்தசலுகை அமலுக்கு வருவதாக கூறப்பட்டிருந்தது.
தற்போது இந்த சலுகை 2014 டிசம்பர் 31-ந்தேதிக்குமுன்பு ஓய்வுபெற்றவர்களுக்கும் பொருந்தும் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சலுகையை மாநிலம்முழுவதும் உள்ள ஓய்வுபெற்ற ஊழியர்கள்அனைவருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக