செப்டம்பர் 26 ல் இடைநிலை ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுமா... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

செப்டம்பர் 26 ல் இடைநிலை ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுமா...

🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் சிவகங்கையில் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்

*கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எங்கள் அமைப்பின் சார்பாக ரூ.50 லட்சத்திற்கு மேல் நிதி அளிக்க இருக்கிறோம்.

*தமிழகத்தில் பல்வேறு வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் பாடநூல் வடிவமைப்பிற்கு தலைமையேற்றுள்ள கல்வித்துறை செயலர் மதிப்புமிகு. உதயசந்திரன் மாற்றப்பட்டுள்ளது கல்வித்துறையில் அரசியல் தலையீடு உள்ளதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

* இரண்டு ஊதியக்குழுவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின்  வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை கருதி  ஊதிய மீட்பு மாநாட்டை செப்டம்பர் 26 ல் சென்னையில் நடத்த உள்ளோம். இதில் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். அதில் எங்களது கடுமையான போராட்ட அறிவிப்பை வெளியிட உள்ளோம் எனத்தெரிவித்தார். இந்த மாநாட்டிற்கு பிறகு இடைநிலை ஆசிரியர்களுக்கு விடுவுகாலம் பிறக்கும் என நம்பிக்கையுடன் இருப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here