*🎯அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மதிப்பெண் சான்றிதழ்களை அச்சடிக்க விதிகளை மீறி ரூ.62 ஒப்பந்தம் போட்டு ஊழல் நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது வந்துள்ளது. இது குறித்து தனியார் நிறுவனத்திடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்*
*🎯சென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் ரூ.400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டு முறைகேடு நடந்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்தனர். இதில் 2015 முதல் 2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி.வி.உமா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது*
*🎯இந்த முறைகேட்டில் ஏற்கெனவே முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா, உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்*
*🎯அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு மே-ஏப்ரல் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வின் போது தேர்வுத்தாள் மறு மதிப்பீடுகள் நடந்தபோது பணம் வாங்கிக் கொண்டு மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதும், ஒரு தேர்வுத்தாளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வாங்கிக் கொண்டு கூடுதல் மதிப்பெண் அளித்துள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இப்படி பணம் வாங்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது*
*🔶ஒரே மாணவனிடம் 18 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றது போல் சான்றிதழ் தர ஏராளமான வசூல் வேட்டையை நடத்தியுள்ளது அம்பலமானது. இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது*
*🔰இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா மற்றொரு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது*
*🎯அதாவது அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மதிப்பெண் சான்றிதழ்களை அச்சடிக்க விதிகளை மீறி ஒப்பந்தம் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது*
*🔶புதிய நிறுவனத்துக்கு சான்றிதழ்களை அச்சடித்து கொடுப்பதில் 2 மாதத்துக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு டெண்டரை உமா கொடுத்துள்ளார்*
*🔶அதற்கென அமைக்கப்பட்டுள்ள கமிட்டியையும் மீறி டெண்டர் கொடுத்துள்ளார். இதில் ஏராளமான நிறுவனங்கள் டெண்டர் கோரி விண்ணப்பித்தன. இந்த டெண்டர் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கொடுக்கப்பட்டது*
*🎯போலியாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி அந்த நிறுவன அதிகாரிகளை டெண்டரில் கலந்து கொள்ள அனுமதித்துள்ளார்*
*🔶இதுவரை இந்த நிறுவனத்துக்கு யாரும் ஒப்பந்தம் கொடுத்ததில்லை என்று கூறப்படுகிறது. மதிப்பெண் பாதுகாப்புக்காக டெண்டரை நம்பகத்தகுந்த இடத்தில் மட்டுமே கொடுப்பது வழக்கம். ஆனால், உமா முறைகேடாக விதிகளை மீறி போலி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது அம்பலமானது*
*🔶தேர்வு கமிட்டி கூறிய அறிவுரைகளையும் ஏற்காமல் அவர்களுக்கு எந்த தகவலையும் கூறாமல் உமா தன்னிச்சையாக ஒப்பந்தம் பெற விண்ணப்பிக்காத போலி நிறுவனமான “இன்காக்னிடோ போரன்சிக் பவுண்டேஷன்” நிறுவனத்துக்கு 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதிப்பெண் சான்றிதழ்ககளை அச்சிட ரூ.62.34 கோடி மதிப்பிலான டெண்டர் வழங்கியுள்ளார்*
*2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மதிப்பெண் சான்றிதழ் அச்சடிப்பதற்காக ரூ.84.71 கோடியை அண்ணா பல்கலைக்கழகம் செலவு செய்துள்ளது*
*🎯போலி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட சமயத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிரேடு மதிப்பெண் சான்றிதழ்கள், புரவிஷனல் சர்டிபிகேட், டிகிரி சர்டிபிகேட் போன்றவை தயாரிக்க 2 லட்சம் சான்றிதழ்களே தேவைப்பட்டன*
*🎯ஆனால் 20 லட்சம் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிப்பதற்கு கொடுத்துள்ளனர். கூடுதலாக 18 லட்சம் சான்றிதழ்களை ஒரு புதிய நிறுவனம் மூலம் இவ்வளவு கோடி செலவழித்து அச்சடிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது*
*🎯இதுதொடர்பாக தனியார் நிறுவனத்திடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக