காவேரியில் உச்சகட்ட பரபரப்பு! இன்று காலை முதல் வெளியூர்களிலிருந்தும் தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் காவேரி மருத்துவமனையைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு எழும்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.காலை 9.35 மணிக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் மற்றும் முக்கிய  - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காவேரியில் உச்சகட்ட பரபரப்பு! இன்று காலை முதல் வெளியூர்களிலிருந்தும் தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் காவேரி மருத்துவமனையைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு எழும்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.காலை 9.35 மணிக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் மற்றும் முக்கிய 




காவேரியில் உச்சகட்ட பரபரப்பு!
திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து, நேற்று மதியம் முதலே அவர் சிகிச்சை பெற்று வரும் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர்.


மாலை 6.30 மணியளவில் அறிக்கை வெளியிட்ட காவேரி மருத்துவமனையும், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை உறுதிப்படுத்தியது. மருத்துவ சிகிச்சைகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு கருணாநிதியின் உடல்நிலை வழங்கும் ஒத்துழைப்பைப் பொறுத்தே கணிக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
அறிக்கை வெளியிட்ட சற்று நேரத்திலேயே திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் எனப் பலரும் மருத்துவமனைக்கு வந்தனர்.
ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், “கலைஞரின் உடல்நிலை குறித்து தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், மருத்துவமனையில் நேரில் நலம் விசாரித்து வர சொன்னார். அதன்படி ஸ்டாலினிடம் கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். மருத்துவ அறிக்கையின்படி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கலைஞர் அவர்கள் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும்” என்று கூறினார்.
தொண்டர்கள் அதிகளவில் குவிந்ததால் மருத்துவமனையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆழ்வார்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. காவல் துறையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ‘எழுந்து வா தலைவரே’ என்று தொண்டர்கள் உணர்ச்சிப் பிழம்பாக இடைவிடாமல் முழக்கமிட்டபடியே இருந்தனர்.


இரவு 8.40 மணியளவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் பாஜக தமிழக தலைவர் தமிழிசையும் இருந்தார். ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நிதின் கட்கரி கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்காமலேயே திரும்பிச் சென்றார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மூத்த அரசியல் தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தேன். அவர் விரைவில் நலம்பெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சற்று நேரத்தில் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் கனிமொழி, பொன்முடி ஆகியோர் மீண்டும் மருத்துவமனைக்கு வந்தனர்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்றிருந்த திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நேற்றிரவே விமானம் மூலம் சென்னை வந்தனர.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிவதற்காக காவேரி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் காத்துக்கிடக்கின்றனர்.


திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் இன்று 11ஆவது நாளாக சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டதையடுத்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவிந்துவருகின்றனர். தங்கள் தலைவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் இரவு-பகல் பாராமல் மருத்துவமனை முன்பே காத்திருக்கும் அவர்கள் எழுந்து வா தலைவனே என்று இடைவிடாமல் இடும் முழக்கம் ஆழ்வார்பேட்டை பகுதியையே அதிர வைத்துக்கொண்டிருக்கிறது.


இன்று காலை முதல் வெளியூர்களிலிருந்தும் தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் காவேரி மருத்துவமனையைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு எழும்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
காலை 9.35 மணிக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளனர்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தனர். இதுபோலவே தமாகா நிர்வாகிகளுடன் வாசனும் மருத்துவமனைக்கு வந்தார். மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் வந்திருந்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்டோரிடம் கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். கலைஞரின் மன தைரியத்தால் விரைவில் குணமடைந்து மீண்டுவருவார் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.


பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை காவேரி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் எனது நண்பரும், திமுக தலைவருமான கலைஞர் முழுமையான உடல்நலம் பெற வேண்டும்; மக்கள் பணியாற்ற வேண்டும் என்று விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


கோபாலபுரம் இல்லம் அமைந்துள்ள பகுதியில் தடுப்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here