இயற்கை பேரிடரில் இருந்து பாதுகாக்க இந்தியாவிலேயே முதன்முறையாக தெலங்கானா மாநிலத்தில் பேரிடர் மீட்பு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடரால் தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், பேரிடர் நேரும்போதெல்லாம் மீட்புப் பணிகள் கடும் சவாலான பணியாக விளங்குகிறது.
இந்த நிலையில், இந்தியாவிலேயே முதன்முறையாக தெலங்கானா மாநிலத்தில் பேரிடர் மீட்பு வாகனம் ஆகஸ்ட் 18ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த வாகனம் 24 மணி நேரமும் செயல்படும். மேலும், ஆபத்தான நேரங்களின்போது உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும்.
இதற்காக எட்டு வாகனங்கள் மீட்புப் பணிகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்புப் பணிகளுக்காக 120 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக