மும்பை: பயனாளிகளின் தகவல்கள், வங்கிக்கணக்கில் பணம் போன்றவற்றை திருட போலி ஆப்கள் அதிகளவில் வெளியாகின்றன.
இவை கூகுள் ப்ளே ஸ்டோரில் ஏராளமாக உள்ளன.தவறான ஆப்களை கண்டறிந்து அவற்றை நமது செல்போனில் தரவிறக்கம் செய்யாமல் இருந்தாலே தகவல் திருட்டு பிரச்சனை எழாமல் இருக்கும்.
தவறான ஆப்களை கண்டறிய எளிமையான வழிமுறைகள் உள்ளன.ஆப்களின் பெயர்களை முதலில் சரிபார்க்க வேண்டும். ஒரிஜினல் ஆப்களை ஒத்த பெயர்களைக்கொண்ட ஆப்கள் போலியாக நடமாடும். எனவே, பெயர்களின் எழுத்துக்களை, எழுத்துருக்கள் கேப்பிட்டல் லெட்டரா, ஸ்மால் லெட்டரா என சரிபார்த்து சரியான ஆப்களை இனம் காணலாம்.இரண்டாவதாக, குறிப்பிட்ட ஆப் எத்தனை முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. அதன் ரேட்டிங் என்ன. ஆப் மீதான கருத்துக்கள் ஆகியவற்றை தெரிந்துகொள்வதாலும் போலிகளை கண்டறியலாம்.
போலி ஆப்களை கண்டறிய கூகுள் நிறுவனமே ஒரு மென்பொருள் வெளியிட்டுள்ளது.’ப்ளே புரொடக்ட்’ எனப்படும் அந்த ஆப்பை பயன்படுத்துவதால் போலி ஆப்கள் எளிதாக தெரிந்துவிடும்.
அல்லது ப்ளே புரொடக்ட்-ஆல் சரிபார்க்கப்பட்டது என்ற லேபிளுடன் வரும் ஆப்களை நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக