வாடிக்கையாளர்கள் தங்களது டெபிட் கார்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு ஸ்டேட் பேங்க் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரும் பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), காந்தக் கோடுகள் (magnetic stripe) கொண்ட டெபிட் கார்டுகளை திருப்பிக் கொடுத்துவிட்டு, இஎம்வி (EMV) சிப் கொண்ட டெபிட் கார்டுகளை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளுமாறு தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மோசடிகளிலிருந்து வாடிக்கையாளர்களைக் காக்கும் பொருட்டு, சிப் அடிப்படையிலான, பின் எண் வசதியுடனான டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. போலி கார்டு மோசடிகளிலிருந்து இஎம்வி சிப் கார்டுகள் பாதுகாப்பளிக்கின்றன. மேலும் தொலைந்த கார்டுகள், திருடப்பட்ட கார்டுகளிலிருந்தும் பாதுகாப்பளிக்கின்றன.
இதுகுறித்து எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அன்பான வாடிக்கையாளர்களே, இது மாற்றத்துக்கான நேரம். ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளின்படி, நீங்கள் உங்களது காந்தக் கோடு டெபிட் கார்டுகளை இஎம்வி சிப் டெபிட் கார்டுகளாக 2018ஆம் ஆண்டின் இறுதிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த மாற்றம் முற்றிலும் பாதுகாப்பானது. மேலும், இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக