போய் வாருங்கள் அய்யா!!! கண்ணீருடன் விடை கொடுக்கும் ஆசியர்கள்!!! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

போய் வாருங்கள் அய்யா!!! கண்ணீருடன் விடை கொடுக்கும் ஆசியர்கள்!!!



போய் வாருங்கள் அய்யா!!! கண்ணீருடன் விடை கொடுக்கும் ஆசியர்கள்!!!


ஆசிரியர்களின் விடிவெள்ளி திரு.த.உதயச்சந்திரன் இ.ஆ.ப*

ஒரு மனிதன் எத்தனை ஆண்டுகள் ஒரு பதவியில் இருந்தார் என்பது முக்கியம் அல்ல. அவர் என்ன செய்தார் என்பதே முக்கியம். 23 ஆண்டுகளே வாழ்ந்த பகத்சிங் இன்னும் ஈராயிரம்ஆண்டுகள் நினைவு கூறத்தக்கவர்.34 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த பாரதி தமிழ் உள்ள வரை நிலைத்து நிற்பவர். அந்த வகையில் சில காலம் மட்டுமே பள்ளிக்கல்வித் துறையில் இருந்தாலும் ஒவ்வொரு ஆசிரியர் மனதிலும் நீங்க இடம் பிடித்த நம் பள்ளிக்கல்வித்துறை செயலரின் பெயர் பொன் எழுத்துக்களால் பொரிக்கப்பட்டு விட்டது. அதை மாற்ற எந்த கொம்பனாலும் முடியாது.

அப்படி என்ன செய்தார் அவர்

கல்வியை வியாபாரமாகவே நடத்தி வந்த கல்வி கொள்ளையர்களுக்கு சவுக்கடி கொடுத்தார். லட்சங்களில் புரண்டு கொண்டிருந்த ஆசிரியர் கலந்தாய்வில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வந்தார்.
இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தார். அதற்கு பரிசு பணியிட மாற்றம்.

ஒரு தென்கோடியில் உள்ள ஆசிரியரின் கருத்துக்கும் மதிப்பு அளித்தவர் இவர் மட்டுமே. முயன்று பாருங்கள் எல்லாமே முடியும் என்ற ஒன்றை வார்த்தையின் மூலம் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் நம்பிக்கை கீற்றாக விளங்கியவர். 

 நாங்கள் உங்களை எங்கள் அதிகாரியாக மட்டும் பார்க்கவில்லை. எங்களின் மூத்த சகோதரனாக தான் பார்த்தோம். நீங்கள் குன்றின் மீது ஏற்றி வைத்த தீபம் அண்ணா.உங்களின் அருமை பழனிசாமிகளுக்கும் ,செங்கோட்டையன்களுக்கும் புரியாது அண்ணா. நீங்கள் எங்கள் நெஞ்சில் ஏற்றிய தீ எங்கள் பணிகாலம் முழுவதும் அணையாது எறியும் அண்ணா.

 நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கின்றோம் எங்கள் வகுப்பறையில் பல உதயச்சந்திரன்கள் உருவாவார்கள் என்று.நாங்கள் இன்னும் எத்தனை பள்ளிக்கல்வித்துறைச் செயலரைக் கண்டாலும் எங்களின் ஒரே செயலர்  நீங்கள் மட்டுமே.

ஒரு துறை செயலரை மாற்றம்
செய்ததற்குகாக பல ஆசிரியர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள் என்றால் அது
உங்களுக்காகவே மட்டும் அண்ணா.

ஹெலிகாப்டரைப் பார்த்து வணங்கியவர்களுக்கும்
கார் சக்கரத்தைத் தொட்டு வணங்கியவர்களுக்கும் தெரியாது அண்ணா இந்த துறையும் உங்கள் மனதிற்கு நெருக்கமானது என்று.

கீழடியில் அகழ்வாய்வு நடந்த போது முதலில் போய் பார்த்தது நீங்கள் தான் என்று  எத்தனை பேருக்கு அண்ணா தெரியும்.

போய் வாருங்கள் அண்ணா.உங்களின் லட்சிய சிந்தனைகளை நெஞ்சில் நிறுத்தி பணிபுரிய தமிழகம் முழுதும் இரண்டு லட்சம் ஆசிரியர்கள் உள்ளோம்.

இனி ஒவ்வொரு வகுப்பறையிலும் உங்களின் பெயர் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

உங்கள் காலத்தில் நாங்கள் ஆசிரியராய் இருந்தோம் என்பது எங்களுக்கு கிடைத்த பெரும் பேறு.

சந்திரன் ஒளிராத நாள் ஒன்று என்றும் கிடையாது
அதுபோல
உதயச்சந்திரன் ஒளிராத துறை என்று ஒன்றும் கிடையாது.

போய் வாருங்கள் *அய்யா உங்களோடு நாங்கள் இருக்கோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here