தேசிய கீதம் பாடாத பள்ளியின் அங்கீகாரம் ரத்து! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தேசிய கீதம் பாடாத பள்ளியின் அங்கீகாரம் ரத்து!




சுதந்திரத் தினதன்று மாணவிகளை தேசிய கீதம் பாட அனுமதி மறுத்த மதரசா பள்ளியின் அங்கீகாரத்தை உத்தரப் பிரதேச அரசு ரத்து செய்துள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலத்தின் மஹாராஜ்கஞ்ச் பகுதியில், முஸ்லிம் மத போதனைகள் அளிக்கும் மதரசா பள்ளி உள்ளது. இங்கு மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 15ஆம் தேதி அன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, தேசிய கீதம் பாடுவதற்கு மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் மாவட்டச் சிறுபான்மையினர் துறை அதிகாரி பிரபாத் குமார், மதரசா பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதில் தேசியகீதம் பாட அனுமதி மறுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மதரசா பள்ளிக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி அவர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இதனை ஏற்று மதரசா பள்ளிக்கான அங்கீகாரத்தை உத்தரப் பிரேதச அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. மேலும், மதரசா பள்ளியின் முதல்வர் உள்பட மூவரின் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டு, மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here