*பிளே ஸ்கூல்களுக்கு உரிமம் பெறுதல், புதுப்பித்தல் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு, 43 வரன்முறைகள் வகுக்கப்பட்டுள்ளன*
*குறிப்பாக, வகுப்பறைக்கு இரு வாசல்கள், 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், சி.சி.டி.வி., கேமரா பொருத்துதல் உள்ளிட்ட, பல நிபந்தனைகள் உள்ளன*
*இதை பின்பற்றிகோவையில், 10 சதவீத பள்ளிகள் கூட, உரிமம் பெறவில்லை.இளம் மழலையர் பள்ளிகளின் முழுமையானபட்டியலும், மாவட்ட கல்வி அலுவலகங்களில் இல்லை*
*குடியிருப்புகளுக்கு இடையில், வீடு போன்ற கட்டமைப்பு கொண்ட கட்டடங்களில், பல பள்ளிகள் இயங்குகின்றன. சில பள்ளிகளில் காஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமைக்கின்றனர்*
*⚡பள்ளி கட்டடத்துக்கு மேல், வணிக ரீதியிலோ அல்லது, குடியிருப்போ இருக்க கூடாதென விதிமுறையில் உள்ளது*
*ஆனால், பல பள்ளிகள் இவ்விதிமுறைகளை பின்பற்றுவதில்லை*
*அதிகாரிகளும் இப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வதில்லை*
*அதிகாரிகளும் இப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வதில்லை*
*⚡கும்பகோணம் பள்ளியில் தீயில் கருகிய தளிர்களைக் கண்டு, கண்ணீர் வடித்த வரலாறு இருந்தும், இன்னும் கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியமுடன்தான் நடந்து கொள்கின்றனர்*
*⚡மாவட்ட பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் தேவராஜ் கூறுகையில்,''உரிமமின்றி செயல்படும் தனியார் பள்ளிகளை கண்டறிய, மாவட்ட வாரியாக பிரத்யேக குழு அமைக்க வேண்டும். ''உரிமம் பெறாத பள்ளிகளின் பட்டியலை கல்வித்துறை வெளியிட வேண்டும். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள், பிளே ஸ்கூலில் படிப்பதால், இப்பள்ளிகளை ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட வேண்டும்,'' என்றார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக